மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி மற்றும் சேடபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட 236 ஊரக குடியிருப்புகளுக்கு வைகை ஆற்றை நீராதாரமாக கொண்டு ஆண்டிப்பட்டி சேடப்பட்டி கூட்டுக் குடிநீர்திட்டத்தினை மேம்படுத்தி கூடுதலாக குடிநீர் வழங்கும் திட்டம்
மதுரை மாவட்டத்திலுள்ள டி.கல்லுப்பட்டி மற்றும் சேடப்பட்டி ஒன்றியத்தைசார்ந்த 236 ஊரக குடியிருப்புகளுக்கான வைகை ஆற்றினை நீராதாரமாகக் கொண்ட கூட்டுக்குடிநீர் மேம்பாட்டுத் திட்டத்திற்கு நிர்வாக ஒப்புதல் அரசுஆணை நிலைஎண்.16நாள்26.07.2022 ல்ரூ. 240.45 கோடிக்கு வழங்கப்பட்டது. இத்திட்டம் ஜல்ஜீவன் மிஷன் நிதிமூலம் நிறைவேற்றப்படவுள்ளது.இத்திட்டத்தில் மதுரை மாவட்டத்தில்டி.கல்லுப்பட்டி ஒன்றியத்தைச் சார்ந்த 118 குடியிருப்புகள் மற்றும் சேடப்பட்டி ஒன்றியத்தைச் சார்ந்த 118 குடியிருப்புகள் ஆகமொத்தம் 236 குடியிருப்புகள் பயன்பெற உள்ளன . இத்திட்டம் இடைக்கால மக்கள் தொகை (2039) 1.89 இலட்சம் மக்களுக்கு 14.17 மில்லியன்லிட்டர், உச்சகாலம் (2054) மக்கள் தொகை 2.09 இலட்சம் மக்களுக்கு 15.55 மில்லியன் லிட்டர் வீதம் குடிநீர் வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம்236ஊரககுடியிருப்புகளுக்கு நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 40 லிட்டரிலிருந்து 55 லிட்டர் வீதம் குடிநீர் வழங்க மேம்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது
இத்திட்டத்தில் ஏற்கனவே உள்ள கட்டமைப்புகளான வைகை அணை தலைமை இடத்தில் உள்ள நீர்எடுப்பு கிணறு, நீர்சேகரிப்புகிணறு , குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் திம்மரசநாயக்கன்னுரில் உள்ள இடைமட்ட நீர்தேக்கதொட்டி, கனவாயில் உள்ள உச்சமட்ட நீர்தேக்கதொட்டி , நீர்உந்து நிலையங்கள் மற்றும் 19 பெருமளவு நீர்தேக்க தொட்டியுடன் புதிதாக கட்டப்படவுள்ள 9 பெருமளவுநீர்தேக்கதொட்டி , 52 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் குடிநீர் ஏற்றப்பட உள்ளது. பின்னர் நீர்தேக்கத் தொட்டிகளில் இருந்து ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள (151.42 கீமீ) மற்றும் புதிதாக அமைக்கப்பட உள்ள(385.48 கீமீ) பகீர்மான குழாய்கள் மூலம் பயனாளிகளுக்கு குடிநீர் வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 44831 வீட்டு இணைப்புகள் வழங்கப்படவுள்ளது.
இத்திட்டத்திற்கான பணிஉத்தரவு 08.04.2023 அன்று வழங்கப்பட்டு 10/2024க்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.