Section: Major Water Supply Schemes pages are not under access control

தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி (61), ஒட்டபிடாரம் (88), கயத்தார் (16), கோவில்பட்டி (22), புதூர் (83) மற்றும் விளாத்திகுளம் (93)

ஒன்றியங்களைச்சார்ந்த 363 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தூத்துக்குடி, ஒட்டபிடாரம், கயத்தார், கோவில்பட்டி, புதூர் மற்றும் விளாத்திகுளம் ஒன்றியங்களைச் சார்ந்த 363 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம், அரசாணை எண்.166/ நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை/ நாள்.23.11.2022-ல் ரூ.515.72 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது. இத்திட்டமானது ஜல்ஜுவன் மிஷன் திட்டத்தின் கீழ் நிறைவேற்றப்படவுள்ளது.

இத்திட்டத்தின் இடைக்கால (2039) மற்றும் உச்சகட்ட (2054) மக்கள் தொகை முறையே 3,50,821 மற்றும் 3,96,376ஆகும். மேலும் நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 55 லிட்டர் வீதம், இடைக்கால மற்றும் உச்சகட்ட குடிநீர் தேவைகள் முறையே 13.59 மற்றும் 16.57 மில்லியன் லிட்டர் ஆகும்.

இத்திட்டத்தில் தாமிரபரணி ஆற்றினை நீர் ஆதாரமாகக் கொண்டு கருங்குளம் ஒன்றியம் அகரம் ஊராட்சியைச் சார்ந்த அகரம் கிராமத்திற்கு அருகில் நீர் எடுக்கும் கிணறு ஒன்று அமைக்கப்பட உள்ளது, பின்னர் குடிநீர் எடுக்கப்பட்டு சேதுராமலிங்கபுரத்தில் 16.57 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு, 20.35கி.மீ நீளமுள்ள நீர் உந்து குழாய்கள் பதிக்கப்பட்டு மணியாச்சியில் அமைந்துள்ள தரைமட்ட நீர் தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்றப்படுகிறது. மணியாச்சியிலுள்ள தரைமட்ட நீர் தேக்க தொட்டியிலிருந்து மணியாச்சியில் அமைந்துள்ள உயர் மட்ட நீர் தேக்கத் தொட்டிக்கு 39 கி.மீ நீளமுள்ள நீர் உந்து குழாய்கள் மூலம் மந்தித்தோப்பு உயர்மட்ட தொட்டிக்கு குடிநீர் ஏற்றப்படுகிறது. இவ்விரண்டு உயர்மட்ட நீர் தேக்க தொட்டிகளிலிருந்து 42 ஊராட்சி தரைமட்ட நீர் தேக்கத் தொட்டிகளுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. அதிலிருந்து 60 புதிய மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகளுக்கும் மேலும் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள 356 மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகளுக்கும் குடிநீர் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 55 லிட்டர் வீதம் குடிநீர் வழங்கப்படவுள்ளது. மேலும் இத்திட்டத்தின் மூலம் 92407 புதிய வீட்டு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்படவுள்ளது.

இத்திட்டத்திற்கான பணி உத்தரவு 31.03.2023-ல் வழங்கப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தினை அக்டோபர் 2024 ல் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

 Flow Diagram :

Open

Salient Details

Open