மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூர், செல்லம்பட்டி, கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி, வாடிப்பட்டி ஆகிய ஒன்றியங்களில் உள்ள 867 கிராம குடியிருப்புகளுக்கும் மற்றும் நிலக்கோட்டையில் உள்ள சிப்காட் தொழில் நிறுவனத்திற்குமான வைகை ஆற்றினை நீராதாரமாகக் கொண்ட கூட்டுக்குடிநீர்த்திட்டம்.
மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், செல்லம்பட்டி, கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி, வாடிப்பட்டி ஆகிய ஒன்றியங்களில் குடிநீர்ப்பற்றாக்குறை நிலவும் ஊரகக்குடியிருப்புகளுக்கு வைகை ஆற்றினை நீராதாரமாகக் கொண்ட கூட்டுக்குடிநீர்த்திட்டத்திற்கு நிர்வாக ஒப்புதல் அரசாணை நிலை எண்.142/ நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை/ நாள்.11.10.2022-ல் ரூ. 1536.31 கோடிக்கு வழங்கப்பட்டது. இத்திட்டம் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் நிறைவேற்றப்பட உள்ளது.
இத்திட்டத்தில் மதுரை மாவட்டதில் உள்ள அலங்காநல்லூர் (116), செல்லம்பட்டி (229), கள்ளிக்குடி (77), திருமங்கலம் (155), திருப்பரங்குன்றம் (72), உசிலம்பட்டி (150), வாடிப்பட்டி (68) ஆகியஒன்றியங்களில் உள்ள 867 ஊரகக்குடியிருப்புகள் பயன்பெற உள்ளன. இத்திட்டத்திற்கான இடைக்கால (2039) மக்கட்தொகை 8.76 இலட்சம் மக்களுக்கு 44.60 மில்லியன் லிட்டர், உச்சகால (2054) மக்கட்தொகை 10.93 இலட்சம் மக்களுக்கு 60 மில்லியன் லிட்டர் வழங்க வடிவமைக்கப்பட்டு நபர் ஒருவருக்கு நாளொன்றுக்கு 55 லிட்டர் வீதம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படவுள்ளது.
இத்திட்டத்திற்கு தேனி மாவட்டம் வைகை அணையின் கீழ்புறம் 1.5 கி.மீ. தொலைவில் வைகை ஆற்றில், நீர் உள் எடுக்கும் கிணறு அமைக்கப்பட்டு, பின்னர் தேனிமாவட்டம் குள்ளபுரத்தில் அமையவுள்ள 60 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு 3.6 கிமீ தூரத்திற்கு உந்து குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு சுத்திகரிக்கப்பட உள்ளது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 370 மீ தொலைவில் அமைய உள்ள 25 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட முதன்மை சமநிலை நீர்தேக்கத் தொட்டியில் (MBR) நீர் உந்தப்பட்டு, பிரதானக் குழாய்கள் மற்றும் தன்னோட்ட குழாய்கள் 195.13 கிமீ மூலம் கொண்டு செல்லப்பட்டு, 10 தரைமட்ட நீர்த் தேக்கத்தொட்டி, 17 சமநிலை நீர்தேக்கத்தொட்டி, 114 மண்டல சமநிலை மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிகள் (ZBR), 1689 கிமீ தன்னோட்ட குழாய்கள் மூலம் பயனாளிகளுக்கு குடிநீர் வழங்க வழிவகை செய்யப்படவுள்ளது.
இத்திட்டத்தில் சுத்திகரிப்பு செய்யப்பட்ட 58.00 MLD நீரானது உசிலம்பட்டி, செல்லம்பட்டி, கள்ளிக்குடி, திருப்பரங்குன்றம், திருமங்கலம், அலங்கநல்லூர் மற்றும் வாடிப்பட்டி ஆகிய 7 ஒன்றியங்களுக்கும் 2.00 மில்லியன் லிட்டர் நீரானது சிப்காட், நிலக்கோட்டைக்கும் வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தில் புதிதாகக் கட்டப்பட உள்ள 310 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கும், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள 1135 மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகளுக்கும் குடிநீர் ஏற்றப்பட உள்ளது. பின்னர், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளிலிருந்து ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள மற்றும் புதிதாக அமைக்கப்பட உள்ள பகிர்மானக் குழாய்கள் மூலம் பயனாளிகளுக்கு குடிநீர் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் 116717 புதிய வீட்டிணைப்புகள் வழங்கப்பட உள்ளன.
இத்திட்டம் 2 சிப்பங்களாகப் பிரிக்கப்பட்டு, இரண்டாம் சிப்பத்திற்கு 31.03.2023 அன்று பணி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. முதல் சிப்பம் ஒப்பந்த நிலையில் உள்ளது. அனைத்து பணிகளும் 09/2024 க்குள் முடிக்க இலக்கிடப்பட்டுள்ளது.