இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 2 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் 11 ஒன்றியங்களில் உள்ள 2306 ஊரகக்குடியிருப்புகள் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஒட்டன்சத்திரம் நகராட்சி, கீரனூர், நெய்க்காரப்பட்டி பேரூராட்சிகள் மற்றும் 7 ஒன்றியங்களில் உள்ள 1422 ஊரகக் குடியிருப்புகளுக்கான காவிரி ஆற்றினைநீராதாரமாகக் கூட்டுக்குடிநீர்திட்டம்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 2 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் 11 ஒன்றியங்களில் உள்ள 2306 ஊரகக்குடியிருப்புகள் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஒட்டன்சத்திரம் நகராட்சி, கீரனூர், நெய்க்காரப்பட்டி பேரூராட்சிகள் மற்றும் 7 ஒன்றியங்களில் உள்ள 1422 ஊரகக் குடியிருப்புகளுக்கான காவிரி ஆற்றினைநீராதாரமாகக் கூட்டுக் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு நிர்வாக ஒப்புதல் அரசாணை நிலை எண். 176 நாள்.14.12.2022 மற்றும் அரசாணை நிலை எண்.52 நாள்.02.05.2023-ல் ரூ. 4187.84 கோடிக்கு வழங்கப்பட்டது. இத்திட்டம் ஜல் ஜீவன் மிஷன் மற்றும் அம்ரூத் திட்டங்களின் நிதி மூலம் நிறைவேற்றப்படவுள்ளது.
இத்திட்டத்தில் திண்டுக்கல்மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம் நகராட்சி, கீரனூர், நெய்க்காரப்பட்டி பேரூராட்சிகள் மற்றும் 7 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 1422 ஊரகக் குடியிருப்புகளும் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 2 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும்11 ஒன்றியங்களில் உள்ள 2306 ஊரகக் குடியிருப்புகளும் ஆக மொத்தம் 3 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள் மற்றும் 3728 ஊரகக்குடியிருப்புகளும் பயன் பெற உள்ளன.
இத்திட்டத்திற்கான இடைக்கால (2039) மக்கட்தொகை 23.93 இலட்சம் மக்களுக்கு 103.62 மில்லியன் லிட்டர், உச்சகால (2054) மக்கட்தொகை 25.11 இலட்சம் மக்களுக்கு 135 மில்லியன் லிட்டர் வீதம் வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஊரகப்பகுதியில் நபர் ஒருவருக்கு நாளொன்றுக்கு 55 லிட்டர் குடிநீர், பேரூராட்சிப்பகுதிகளுக்கு நபர் ஒருவருக்கு நாளொன்றுக்கு 90 லிட்டர் குடிநீர் மற்றும் நகராட்சிப் பகுதிகளுக்கு நபர் ஒருவருக்கு நாள்ஒன்றுக்கு 135 லிட்டர் குடிநீர் வழங்கப்படவுள்ளது.
இத்திட்டத்தில் கரூர் மாவட்டம் நஞ்சைப்புகளூர் என்னும் இடத்தில் காவிரி ஆற்றில் ஒரு உட்கொள்ளும்கிணறு (Intake Well) அமைக்கப்படவுள்ளது. இங்கு பெறப்படும் இயல்பு நீர் 50.8 கி.மீ க்கு அப்பால் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் அமையப்பெற உள்ள 135 மில்லியன் லிட்டர் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட உள்ளது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இரு பிரிவுகளாக இராமநாதபுரம் மாவட்டத்திற்கும், திண்டுக்கல் மாவட்டத்திற்கும் நீரேற்றக் குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்பட உள்ளது.
I. இராமநாதபுரம் மாவட்டத்திற்கான குடிநீர்த் திட்ட அமைப்பு (அமைப்பு-1)
இத்திட்ட அமைப்பு-1ன் மூலம் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த இடைக்கால (2039) மக்கட்தொகை 15.77 இலட்சம் மக்களுக்கு 67.75 மில்லியன் லிட்டர், உச்சகால (2054) மக்கட்தொகை18.62 இலட்சம் மக்களுக்கு 91.31மில்லியன் லிட்டர் வீதம் வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
அரவக்குறிச்சி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து 34.85 கி.மீ நீரேற்றக் குழாய்கள் மூலம் குருணிக் குளத்துப்பட்டியில் அமையவுள்ள 32.90 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொன்ட தரைமட்ட நீர்த்தேக்கத்தொட்டிக்கும் பின்னர் 61.50 கி.மீ நீரேற்றக் குழாய்கள் மூலம் செவந்தம்பட்டியில் அமையப்பெறவுள்ள 37.90 இலட்சம் லிட்டர் தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிக்கும் கொண்டு செல்லப்பட உள்ளது.
இங்கிருந்து கணபதிபுரம் தலைமை சமநிலை நீர்த்தேக்கத்தொட்டி வரை புவியீர்ப்பு விசையின் மூலம் 42.87 கி.மீ நீளமுள்ள குழாய்களில் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கணபதிபுரம் தலைமை சமநிலை நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்துவரும் நீர், புவியீர்ப்பு விசை மூலம் 3728.12கி.மீ. தூரத்திற்குக் குழாய்கள் பதிக்கப்பட்டு, 98 மண்டல சமநிலை நீர்த்தேக்கங்களுக்கும் (ZBRs) மற்றும் ZBR களில் இருந்து புதிதாகக் கட்டப்பட உள்ள 825மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கும், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள 1250மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கும் குடிநீர் ஏற்றப்பட உள்ளது. பின்னர், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளிலிருந்து ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள மற்றும் புதிதாக அமைக்கப்பட உள்ள பகிர்மானக் குழாய்கள் மூலம் பயனாளிகளுக்குக் குடிநீர் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் 2,44,810 புதிய வீட்டிணைப்புகள் வழங்கப்பட உள்ளன.
II. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், பழனி மற்றும் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியங்களுக்கான குடிநீர்த் திட்ட அமைப்பு (அமைப்பு-2)
இத்திட்டஅமைப்பு-2 ன்மூலம்திண்டுக்கல்மாவட்டம்,ஒட்டன்சத்திரம், பழனி மற்றும் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த இடைக்கால (2039) மக்கட் தொகையான 5.76 இலட்சம் மக்களுக்கு 35.87மில்லியன் லிட்டர், உச்சகால (2054) மக்கட் தொகையான 6.48 இலட்சம் மக்களுக்கு 43.69 மில்லியன் லிட்டர் வீதம் வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து மூன்று ஊராட்சி ஒன்றியங்களுக்கும், ஒரு நகராட்சிக்கும் மற்றும் இரண்டு பேரூராட்சிகளுக்கும் சுமார் 101.00கி.மீதூரம் நீருந்துகுழாய்கள் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கொண்டு செல்லதிட்டமிடப்பட்டுள்ளது. மேலும் சுமார்1 028.00 கி.மீ நீளமுள்ள நீருந்து குழாய்கள் மூலம் ஊரககுடியிருப்புகளுக்கு, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கொண்டு செல்லப்படஉள்ளது.
இத்திட்டத்தின் கீழ்ஒட்டன்சத்திரம், பழனி மற்றும் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியங்களில் புதிதாகஅமைக்கப்படஉள்ள172 புதிய மேல்நிலை நீர்தேக்கதொட்டிகளுக்கும் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள 589 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கும் குடிநீர் ஏற்றப்பட உள்ளது. பின்னர், மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகளிலிருந்து ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள மற்றும் புதிதாக அமைக்கப்பட உள்ள பகிர்மானக்குழாய்கள் மூலம் பயனாளிகளுக்குக் குடிநீர் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் 506 ஊரகக்கிராமங்களுக்கு 35191 வீட்டுக்குடிநீர் இணைப்புகள்கொடுக்கப்படஉள்ளன.
III.திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம், வடமதுரை, வேடசந்தூர் மற்றும் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியங்களுக்கான குடிநீர்த் திட்ட அமைப்பு (அமைப்பு-3)
இத்திட்ட அமைப்பு-3 ன் மூலம் திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம், வடமதுரை, வேடசந்தூர் மற்றும் திண்டுக்கல் ஒன்றியங்களைச் சார்ந்த இடைக்கால (2039) மக்கட் தொகையான 4.60 இலட்சம் மக்களுக்கு 19.48 மில்லியன் லிட்டர், உச்சகால (2054) மக்கட் தொகை 5.31 இலட்சம் மக்களுக்கு 23.38 மில்லியன் லிட்டர் வீதம் வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் ஒரு பகுதியான (அமைப்பு-2) ஒட்டன்சத்திரம் நகராட்சி, கீரனூர், நெய்காரப்பட்டி பேரூராட்சிகள், ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி மற்றும் பழனி ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 506 ஊரக குடியிருப்புகளுக்கு ஏற்கனவே உள்ள நத்தம் மற்றும் வேடசந்தூர் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் ஒட்டன்சத்திரம் மற்றும் பழனி சட்டமன்றத் தொகுதிகளுக்கு செல்லும் குடிநீரை இணைப்பு மாற்றம் செய்து ரெட்டியார்சத்திரம், வடமதுரை, வேடசந்தூர் மற்றும் திண்டுக்கல் ஊராட்சிஒன்றியங்களைச் சார்ந்த 916 ஊரகக் குடியிருப்புகளுக்கு நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 55 லிட்டர் வீதம் வழங்கும் வகையில் அமைப்பு 3 வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்கீழ்ரெட்டியார்சத்திரம், வடமதுரை, வேடசந்தூர் மற்றும் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 57 புதியதரை மட்ட நீர்த்தேக்கத் தொட்டிகள்அமைக்கப்படஉள்ளன. 1147 கி.மீ நீளத்திற்குப் புதிய குடிநீர்க் குழாய்கள்அமைக்கப்படஉள்ளன. புதிதாக அமைக்கப்பட உள்ள 503 புதிய மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிகளுக்கும் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள 525 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கும் குடிநீர்ஏற்றப்படஉள்ளது. பின்னர், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளிலிருந்து ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள மற்றும் புதிதாக அமைக்கப்பட உள்ள பகிர்மானக்குழாய்கள் மூலம்பயனாளிகளுக்குக் குடிநீர்வழங்கப்படஉள்ளது. இத்திட்டத்தின்மூலம் 916 ஊரகக்கிராமங்களுக்கு 40133 வீட்டுக் குடிநீர் இணைப்புகள் கொடுக்கப்படஉள்ளன.
இத்திட்டம் 6 சிப்பங்களாகப் பிரிக்கப்பட்டு, 2,3,,4,5 & 6 சிப்பங்களுக்கு 31.03.2023 அன்றும், சிப்பம் 1 – க்கு 08.04.2023 அன்றும் பணி உத்தரவு வழங்கப்பட்டு, பணிகள் 10/2024 க்குள் முடிக்க இலக்கிடப்பட்டுள்ளது.