நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினம் நகராட்சி , 4 பேரூராட்சிகள் மற்றும் 6 ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த980 ஊரகக் குடியிருப்புகளுக்கு ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் கொள்ளிடம் ஆற்றை நீராதாரமாகக் கொண்ட கூட்டுக் குடிநீர்த் திட்டம்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினம் நகராட்சி , 4 பேரூராட்சிகள் மற்றும் 980 ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர்த்திட்டத்திற்கு நிர்வாக ஒப்புதல் அரசு ஆணை எண்142/ நாள் 11.10.2022 ல் மற்றும் ரூ. 1392.89 கோடி மற்றும் நகர் புற அமைப்புகளுக்கு அரசாணை எண் 52/ நாள்.02.05.2023 மூலம் ரூ. 389.60 கோடிக்கு அம்ருத் 2.0 திட்டத்தின் மூலம் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டம, ஜல் ஜீவன் மிஷன் கீழ் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தின் இடைக்கால (2039) 8.56 இலட்சம் மக்களுக்கு 82.73 மில்லியன் லிட்டர் மற்றும் உச்ச கால (2054) மக்கள் தொகையின் படி 9.65 இலட்சம் மக்களுக்கு 93.00 மில்லியன் லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் நாள் ஒன்றுக்கு வழங்கப்பட உள்ளது.
பகுதி – 1:
இக்கூட்டுக் குடிநீர் திட்டத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள இரண்டு நீர் சேகரிக்கும் கிணறுகள் மற்றும் கூடுதல் நீராதாரம் ஏற்படுத்திட செயல்படுத்தப்பட உள்ள 2 நீர் சேகரிக்கும் கிணறுகள் மற்றும் மாவுத்திருப்பில் அமைக்கப்படவுள்ள 1 நீர் சேகரிக்கும் கிணறு ஆக மொத்தம் 5 நீர் சேகரிக்கும் கிணறுகளில் மொத்த கொள்ளளவான 46.93 மி.லி. குடிநீர் சேகரிக்கப்பட்டு அம்மையப்பனில் அமைந்துள்ள 26.40 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் சேகரிக்கும் தொட்டிக்கு விநியோகம் செய்யப்பட்டு அங்கிருந்து அம்மையப்பன் நீர் சேகரிக்கும் தொட்டியிலிருந்து திருமருகலில் அமைந்துள்ள 25.60 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீருந்து நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு,அங்கிருந்து இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு திட்டச்சேரி பேரூராட்சி மற்றும் நாகப்பட்டினம் நகராட்சிக்கு (17.54 MLD) வெளிப்பாளையத்தில் கட்டப்பட உள்ள 2.8 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரை மட்ட நீர்த்தேக்க தொட்டிக்கு கொண்டு செல்லப்படுகிறது. 2-வது பிரதான குழாயின் மூலம் திருமருகல் நீருந்து நிலையத்திலிருந்து 8.00 லட்சம் லிட்டர் கொள்ளளவு, 4.70 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட பிரதாபராமபுரம் நீருந்து நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது.
பகுதி -2:
தஞ்சாவூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் 1) சறுக்கை, 2) வீரமாங்குடி 3) தூத்தூர், 4) வாழ்க்கை என்னும் இடங்களில் புதிதாக நீர் சேகரிக்கும் கிணறுகள் அமைக்கப்படவுள்ளது (46.07 MLD) இந்நீர் சேகரிக்கும் கிணறுகளிலிருந்து சேகரிக்கும் நீரானது வாழ்க்கை என்னும் இடத்தில் 25.60 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிக்கு சேகரிக்கப்படுகிறது. அங்கிருந்து 1067 மீட்டர் விட்டமுள்ள இரும்பு குழாய்களின் மூலம் 68 கி.மீ தூரம் குழாய்கள் பதிக்கப்பட்டு கொட்டாரக்குடியில் 25.4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீருந்து நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.
இக்கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் பல்வேறு அளவுகள் கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி 172 எண்ணங்கள் மற்றும் மேல்நிலைநீர்த் தேக்க தொட்டி 409 எண்ணங்கள் மற்றும் புதிதாக பதிக்கப்படவுள்ள பல்வேறு வகையான பிரதான குழாய்கள் மற்றும் பகிர்மானக் குழாய்களின் அளவுகள் 1730.756 கி.மீ ஆகும்.
இத்திட்டத்தின் பணிகள் நான்கு சிப்பமாக பிரிக்கப்பட்டு, பணி உத்தரவு முதல் சிப்பத்திற்கு 31.03.2023 லும் 2, 3, மற்றும் 4 சிப்பத்திற்கு 24.04.2023 -ல் வழங்கப்பட்டு பணி தொடங்கப்பட்டு நடைபெற்றுவருகிறது. இத்திட்டத்தின் அனைத்து பணிகளும் 10/2024ல் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.