கோயம்புத்தூர் மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட குறிச்சி மற்றும் குனியமுத்தூர் (வார்டு 87 – 100) பகுதிகளுக்கான பாதாள சாக்கடைத் திட்டம் (அம்ரூத்திட்டம்)
கோயம்புத்தூர் மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட குறிச்சி மற்றும் குனியமுத்தூர் வார்டு 87–100 பகுதிகளுக்கான பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்த அரசு ஆணை எண்.111/நாள்.25.10.2017 இல் ரூ.442.00 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மறுநிர்வாக ஒப்புதல் அரசு ஆணை எண்.43 நாள்.28.02.2019இல் ரூ.591.14 கோடிக்கு வழங்கப்பட்டுள்ளது.தொழில் நுட்ப ஒப்புதல் ரூ.589.54 கோடிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் வடிவமைக்கப்பட்ட கழிவு நீரின் அளவு இடைநிலை ஆண்டு (2034) மக்கள் தொகை 392349, உச்சநிலை ஆண்டு (2049) மக்கள் தொகை 517186-க்கு முறையே 40.26 மில்லியன் லிட்டர் மற்றும் 53.07 மில்லியன் லிட்டர் ஆகும்.
குறிச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதி 13 கழிவு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, 30 கழிவு நீருந்து நிலையங்கள் மூலமாக கழிவு நீர் சேகரிக்கப்பட்டு வெள்ளளூரில் குப்பை கிடங்கு வளாகத்தில் அமைக்கப்படவுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது, கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு, இறுதியாக அருகில் செல்லும் நொய்யல் ஆற்றில் விடப்படும்.
இத்திட்டத்தில் 17754 இயந்திரத்தை இறக்கும் குழிகளின் மூலம் 413.659 கி.மீ நீளமுள்ள கழிவுநீர் குழாய்கள் மூலம் சேகரிக்கப்பட்டு, கழிவுநீர் 30 நீருந்து நிலையங்கள் மூலம் 47.605 கி.மீ நீளமுள்ள நீருந்து குழாய்கள் மூலம் உந்தப்பட்டு வெள்ளலூரில் அமைந்துள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையதிற்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
இத்திட்டம் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
சிப்பம்- I
கழிவு நீர் சேகரிப்பு அமைக்கும் பணிகளுக்கு பணி உத்தரவு 05.09.2018 அன்று வழங்கப்பட்டு, பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.
சிப்பம்- II
கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகளுக்கு பணி உத்தரவு 05.09.2019 அன்று வழங்கப்பட்டு, பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.
இத்திட்டம் 08/2023 இல் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவர இலக்கிடப்பட்டுள்ளது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டப்பின் குறிச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதியின் 14 வார்டுகளும் முழுமையான சுகாதார வசதி பெறும்.