கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மாநகராட்சிக்கான குடிநீர் அபிவிருத்தி திட்டம். (அம்ரூத்திட்டம்)
நாகர்கோவில் மாநகராட்சி குடிநீர் அபிவிருத்தி திட்டமான-து அரசு ஆணை எண். 92, நாள் 12.09.2017 ன் படி ரூ. 251.43 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டமானது அம்ரூட், TNUDF நிதி மற்றும் உள்ளூர் அமைப்புகளின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டம் இடைக்கால மக்கள் தொகை (2032) 3.20 லட்சம் மற்றும் 41.12 மில்லியன் லிட்டர், உச்சகால (2047) மக்கள் தொகை 3.90 லட்சம் மற்றும் 52.04 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
இக்குடிநீர் அபிவிருத்திதிட்டத்திற்கு பெருஞ்சாணி கிராமத்தின் அருகே புத்தன் அணையின் மேற்புறம் உள்ள பரளியாற்றில் 8.00 மீட்டர் விட்டமுள்ள நீர் எடுக்கும் கிணறு அமைக்கப்பட்டு அதிலிருந்து நீர் உந்தப்பட்டு நாகர்கோவில் நகராட்சியில் உள்ள கிருஷ்ணன் கோவில் என்னுமிடத்தில் ஏற்கனவே உள்ள சுத்திகரிப்பு நிலையத்தின் அருகே அமைக்கப்படவுள்ள 41.12 எம்.எல்.டி புதிய சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்யப்படவுள்ளது.
பின்னர் சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீர், சுத்திகரிப்பு நிலையத்தில் அமைக்கப்படவுள்ள 19.70 லட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிகளில் சேகரிக்கப்படுகிறது. பின்னர் நீர் உந்தப்பட்டு ஏற்கனவே நகராட்சியில் உள்ள 12 மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகள் மற்றும் புதியதாக அமைக்கப்படவுள்ள 11 மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகளிலும் சேகரிக்கப்படவுள்ளது, பின்னர் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகளிலிருந்து மாநகராட்சி முழுவதற்கும் புதியதா பதிக்கப்படவுள்ள 420.612 கி.மீ குடிநீர் பகிர்மானக் குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படவுள்ளது. இக்குடிநீர்த் திட்டத்தின் கீழ் 85,000 வீடுகளுக்கு குடிநீர்இணைப்புகள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு 15.11.2017 அன்று பணி ஆணை வழங்கப்பட்டு, பணிகள் முன்னேற்றத்தில் உள்ளது.
இத் திட்டத்தின் அனைத்து பணிகளும் 07/2023 ல் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டம் நிறைவடையும் பொழுது இம்மாநகராட்சியிலுள்ள 3.90 இலட்சம் மக்களுக்கு நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 135 லிட்டர் வீதம் குடிநீர் வழங்கப்படவுள்ளது.