இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இராமேஸ்வரம் நகராட்சிக்கான பாதாளச் சாக்கடை திட்டம் (அம்ரூத் திட்டம்)
இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் நகராட்சிக்கான பாதாள சாக்கடைத் திட்டத்தை செயல்படுத்த அரசு ஆணை எண்.225/நாள் 05.09.2012ல் ரூ.41.35 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது. மேலும் இத்திட்டத்திற்கு திருத்திய நிர்வாக ஒப்புதல் அரசு ஆணை நிலை எண்.44, நாள்: 27.04.2018 –இல் ரூ.52.60 கோடிக்கு வழங்கப்பட்டது.
இத்திட்டத்தில் வடிவமைக்கப்பட்ட கழிவு நீரின் அளவு இடைநிலை ஆண்டு (2034) மக்கள் தொகை 33000, உச்சநிலை ஆண்டு (2049) மக்கள் தொகை 43000-க்கு முறையே 4.08 மில்லியன் லிட்டர் மற்றும் 5.34 மில்லியன் லிட்டர் ஆகும்.
இராமேஸ்வரம் நகராட்சி இரண்டு கழிவு நீர் சேகரிப்பு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, கழிவு நீர் 14.68 கி.மீ குழாய்கள் மூலம் 587 இயந்திர இறங்கு குழிகள் மூலம் சேகரிக்க பட்டு பின்பு நீர் உந்து நிலையம் மூலமாக 4.31 கி.மீ குழாய்கள் மூலம் நீர் உந்துப்பட்டு ஓலைக்குடா பகுதியில் அமைக்கப்படவுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சுத்திகரிக்கப்படவுள்ளது. சுத்திகரிக்கப்பட்ட நீர் உந்தப்பட்டு மாங்காடு கிராமத்தில் கட்டப்பட உள்ள மேல்நிலை தொட்டி மூலம் நகராட்சிக்கு உட்பட்ட பூங்காக்கள் மற்றும் தங்கும் விடுதிகளுக்கு தேவைகேற்ப வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இறுதி நிலையில் பெறப்படும் சுத்திகரிக்கப்பட்ட நீரானது அருகில் உள்ள வனத்துறை நிலத்தில் மரங்கள் வளப்பதற்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கான பணி ஆணை 08.09.2016 அன்று வழங்கப்பட்டு, பணிகள் முன்னேற்றத்தில் உள்ளது இத்திட்டம் ஆகஸ்ட் 2023 இல் முடிக்கப்பெற்று மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்ட பின் இராமேஸ்வரம் நகராட்சி முழுமையான சுகாதார வசதி பெறும்.