திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் நகராட்சி பாதாள சாக்கடை திட்டம் (அம்ருத் திட்டம்)
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சி பாதாள சாக்கடை திட்டம் அம்ருத் திட்டத்தை செயல்படுத்த அரசு ஆணை எண்.05, நாள்:22.01.2018 இல் ரூ.165.55 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான நிதி உதவி அம்ரூத் திட்டத்தில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது
இத்திட்டத்தில் வடிவமைக்கப்பட்ட கழிவு நீரின் அளவு இடைநிலை ஆண்டு (2035) மக்கள் தொகை 155000, உச்சநிலை ஆண்டு (2050) மக்கள் தொகை 171721-க்கு முறையே 16.71 மில்லியன் லிட்டர் மற்றும் 19.746 மில்லியன் லிட்டர் ஆகும்.
ஆம்பூர் நகராட்சி பகுதி 4 கழிவு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, 2 கழிவு நீருந்து நிலையங்கள் மூலமாக கழிவு நீர் சேகரிக்கப்பட்டு கஸ்பா ஏ - ஆம்பூர் நகரில் அமைக்கப்படவுள்ள 16.71 எம்.எல்.டி சுத்திகரிப்பு திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது, கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு, இறுதியாக அருகில் செல்லும் பாலாறு ஆற்றில் விடப்படும்.
இத்திட்டத்தில் 3607 இயந்திர இறங்கும் குழிகள் மூலம் 94.22 கி.மீ நீளமுள்ள கழிவுநீர் குழாய்கள் மூலம் சேகரிக்கப்பட்டு கழிவுநீர் 4 நீருந்து நிலையங்கள் மூலம் 49.50 கி.மீ நீளமுள்ள நீருந்து குழாய்கள் மூலம் உந்தப்பட்டு 16.71 எம்.எல்.டி சுத்திகரிப்பு திறன் கொண்ட கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையதிற்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
இத்திட்டம் இரண்டு சிப்பங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
சிப்பம்- I
கழிவு நீர் சேகரிப்பு அமைக்கும் பணிகளுக்கு பணி உத்தரவு 04.10.18 அன்று வழங்கப்பட்டு, பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.
சிப்பம்- II
கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகளுக்கு பணி உத்தரவு 06.11.2019 அன்று வழங்கப்பட்டு, பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன. இத்திட்டம் 08/2023 இல் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர இலக்கிடப்பட்டுள்ளது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டப்பின் குறிச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதியின் 14 வார்டுகளும் முழுமையான சுகாதார வசதி பெறும்.