புதியதாக இணைக்கப்பட்ட பகுதிகளை உள்ளடக்கிய விரிவாக்கப்பட்ட கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு குடிநீர் அபிவிருத்தித் திட்டம் (பவானி ஆற்றினை நீராதாரமாகக் கொண்ட பில்லூர் III)
இத்திட்டத்திற்கு அரசாணை நிலை எண் 50 நாள் 21.05.2018 ல் ரூ.740.15 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்¦கப்பட்டது. மறு நிர்வாக ஒப்புதல் அரசாணை நிலை எண் 36, நாள் 10.03.2020 ல் ரூ.779.86 கோடிக்கு பெறப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மக்கள் தொகை இடைநிலை (2035) மற்றும் உச்சநிலை (2050) முறையே 24.87 லட்சம் மற்றும் 32.79 லட்சம் ஆகும். வடிவமைக்கப்பட்ட குடிநீர் அளவு நாள் ஒன்றுக்கு இடைநிலை மற்றும் உச்சநிலை முறையே 178.30 மில்லியன் லிட்டர் மற்றும் 318.17 மில்லியன் லிட்டர் ஆகும்.
இத்திட்டத்தில், பவானி ஆற்றில் சமயபுரம் அருகில் அமைந்துள்ள தடுப்பணையின் மேற்பகுதியில் நீர்சேகரிப்பு கிணறு (36மீx9மீ) அமைக்கப்பட உள்ளது. பின்னர் 15.65 கி.மீ நீளமுள்ள இயல்பு நீரேற்று குழாய்கள் மூலமாக நீர் உந்தப்பட்டு கட்டன் மலை அருகில் புதியதாக கட்டப்படவுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு (178.30 எம்.எல்.டி) எடுத்துச் செல்லப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 0.9 கி.மீ தூரம் குகை வழியாக கட்டன் மலையை கடந்து 14.48 கி.மீ தொலைவில் பன்னிமடை கிராமத்தில் அமையப்பெறவுள்ள 146 இலட்சம் லிட்டர் (73 இலட்சம் லிட்டர் - 2 எண்ணம்) கொள்ளளவுள்ள நீர் சேகரிப்பு தரைமட்ட தொட்டியில் சேகரிக்கப்பட உள்ளது. பின்னர் 54.31 கி.மீ நீர் உந்து குழாய்கள் மூலம் இராமகிருஷ்ணாபுரம் (30.00 ல.லி) மற்றும் பிள்ளையார்புரம் (20.00 ல.லி) சமநிலை நீர் தேக்க தொட்டிகளில் சேகரிக்கப்படும்.
இத்திட்டம் மூன்று சிப்பங்களாக பிரிக்கப்பட்டு, பணி ஆணை சிப்பம் I, II மற்றும் III முறையே 18.02.2021, 31.12.2019 மற்றும் 14.05.2020 அன்று வழங்கப்பட்டு, பணிகள் முன்னேற்றத்தில் உள்ளது. இத்திட்டம் ஆகஸ்ட் 2023 இல் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.