Section: State-district-profile pages are not under access control

அரியலூர் மாவட்ட சுயவிவரம்

  • அரியலூர் மாவட்டமானது பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டத்தை வடகிழக்கை எல்லையாகக் கொண்டுள்ளது. கிழக்குப் பகுதியில் நாகப்பட்டினம் மாவட்டமும் தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் தஞ்சை மாவட்டத்தை எல்லையாகக் கொண்டுள்ளது. தென்மேற்கு பகுதியில் திருச்சிராப்பள்ளி மாவட்டமும் மேற்கு பகுதியில் பெரம்பலூர் மாவட்டமும் எல்லையாக உள்ளது.
  • இந்த மாவட்டத்தின் அட்சரேகை 100 53’ 00’’ முதல் 110 26’ 00’’ வரை வடக்கிலும் மற்றும் தீர்க்கரேகை 780 56’ 00’’ முதல் 790 31’ 00’’ வரை கிழக்கிலும் அமைந்துள்ளது. இந்த மாவட்டமானது 1944 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது.

நில அமைப்பியல் மற்றும் வடிகால்:

  • அரியலூர் மாவட்டம் வெள்ளாறு மற்றும் காவேரி ஆற்றை வடிநிலமாக கொண்டுள்ளது.
  • காவிரி தென் பகுதியிலும், வெள்ளாறு வடபகுதியிலும், மருதையாறு தென்பகுதியின் வடிநிலங்களாக அமைந்து, காவிரியின் துணை நதியான கொள்ளிடத்தில் கலக்கிறது.

மழையளவு:

அரியலூர் மாவட்டத்தின் ஐந்தாண்டின் மழையளவு இந்திய வானியல் மையம், சென்னையின்படி கீழ்க்கண்டவாறு:

பெய்த மழையளவு மி.மீ. இயல்பான மழை மி.மீ.
2017 2018 2019 2020 2021
1193.2 814.5 1111.4 1064.4 1646.1 985

புவியமைப்பியல்:

பாறை வகை புவி அமைப்புகள்
படிவுப்பாறை 90 % சுண்ணாம்புகல், மணற்பாறை, கூழாங்கல், ஆற்று வண்டல், கருப்புகளி
கடினப்பாறை 10 % கரும்பாறை – கிரானைட்

நிலத்தடிநீர் அளவு:

இந்த மாவட்டத்தில் 27 மாதிரி கிணறுகள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் கண்காணிக்கப்படுகிறது. மழையளவானது பருவமழைக்கு முன்பும், பின்பும் நீர் அளவீடு செய்யப்படுகிறது. ஐந்தாண்டு மழையளவு கீழ்க்கண்டவாறு உள்ளது:

ஜன
2017

மே
2017

ஜன
2018

மே
2018

ஜன
2019

மே
2019

ஜன
2020

மே
2020

ஜன
2021

மே
2021

5 வருட பருவ
மழைக்கு முன்

5 வருட பருவ
மழைக்கு பின்

28.8

31.7

25.0

31.3

26.9

30.0

26.1

29.1

24.6

27.9

25.2 22.2

நீடித்த நிலைத்தன்மை:

நிலத்தடிநீர் நிலைப்பு தன்மையை உருவாக்கும் பொருட்டு மாநில மற்றும் மத்திய அரசு உதவியுடன் கீழ்க்கண்டவாறு நீர்செறிவூட்டும் கட்டமைப்புகளை உருவாக்கப்பட்டுள்ளது.

The Recharge Structures implemented so far in the district are as under.

வருவாய் உள்வட்டம் மூலம் வகைப்படுத்தல்:

நீர் பயன்பாட்டின் அடிப்படையில் இம்மாவட்டத்தை மார்ச் 2020-ம் ஆண்டில் வருவாய் உள்வட்டம் மூலம் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது.

நீர்வெளிக் கொணருதல் / பயன்பாடு அடிப்படையில் (மார்ச் 2020-ன்படி) வருவாய் உள்வட்டம் எண்ணிக்கை வருவாய் உள்வட்டங்கள்
அதிநுகர்வு நிலை( 100 % மேல்) 0  
அபாயகரமான நிலை( 90 % - 100 %) 0  
மித அபாயகரமான நிலை(70 % - 90%) 1 செந்துறை
பாதுகாப்பான நிலை(70 % உட்பட்ட) 14 ஆண்டிமடம், அரியலூர், இலக்குறிச்சி,ஜெயம்கொண்டாம், கீழப்பலூர், குண்டவெளி,கூவாகம்,
மாத்தூர்,நன்மங்கலம்,பொன்பரப்பி,சுத்தமல்லி, டீ.பாலூர், திருமானுர்,உடையார்பாளையம்.
உவர் ஒன்றியங்கள் 0  
மொத்தம் 15