Section: State-district-profile pages are not under access control

காஞ்சிபுரம் மாவட்ட விவரக் குறிப்பு

  • காஞ்சிபுரம் மாவட்டத்தின் வடக்கில் திருவள்ளூர், மற்றும் சென்னை மாவட்டங்களும், தெற்கில் விழுப்புரம் மாவட்டமும், கிழக்கில் வங்காளவிரிகுடாவும், மேற்கில் திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களும் எல்லைகளாக உள்ளன.
  • இந்த மாவட்டத்தின் அட்சரேகை 120 14’ 00’ முதல் 130 02’ 00 வரை வடக்கிலும் மற்றும் தீர்க்கரேகை 790 31’ 30’ முதல் 800 15’ 30” வரை கிழக்கிலும் அமைந்துள்ளது. இந்த மாவட்டமானது 4307 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது.

நில அமைப்பியல் மற்றும் வடிகால்:

  • காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடல் பகுதிகளும், சமவெளிப் பகுதிகளும், சிறுகுன்றுகளும் உள்ளன.
  • புனித தோகையர் மலை, வண்டலூர், திருக்கழுகுன்றம் ஆகிய மலைகளும் உள்ளன. இம்மாவட்டம் கடல் மட்டத்திலிருந்து 0.5 மீ. முதல் 230 மீ. வரை உயரம் கொண்டது.
  • பாலாறு இம்மாவட்டத்தில் ஓடுகின்றது. இந்த ஆறானது கர்நாடக மாநிலத்தில் உருவாகிறது. செய்யாறு, வேகவதி ஆகியவை பாலாற்றின் துணை நதிகளாகும்.
  • பருவகால நதியான ஆரணி ஆறு, கொரட்ளை ஆறு மற்றும் தொண்டி ஆறு ஆகியவை வடக்கு மற்றும் தென்பகுதியில் ஓடுகின்றது. பாலாறு, ஆரணி ஆறு, கொரட்ளை ஆறு மற்றும் தொண்டி ஆறு ஆகியவை குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு பயன்படுகின்றது.

மழையளவு:

காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஐந்தாண்டின் மழையளவு இந்திய வானியல் மையம், சென்னையின்படி கீழ்க்கண்டவாறு:

பெய்த மழையளவு மி.மீ. இயல்பான மழை மி.மீ.
2017 2018 2019 2020 2021
1191.7 833.0 1131.4 1258.4 1698.1 985

புவியமைப்பியல்:

பாறை வகை புவி அமைப்புகள்
படிவுப்பாறை (70 %) மணற்கல், மணல், களிமண், வண்டல்மண், கடல் படிமம்
கடினப்பாறை கரும்பாறை மற்றும் இலகு பாறை

நிலத்தடிநீர் அளவு:

இந்த மாவட்டத்தில் 47 மாதிரி கிணறுகள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் கண்காணிக்கப்படுகிறது. மழையளவானது பருவமழைக்கு முன்பும், பின்பும் நீர் அளவீடு செய்யப்படுகிறது. ஐந்தாண்டு மழையளவு கீழ்க்கண்டவாறு உள்ளது.:

ஜன
2017

மே
2017

ஜன
2018

மே
2018

ஜன
2019

மே
2019

ஜன
2020

மே
2020

ஜன
2021

மே
2021

5 வருட பருவ
மழைக்கு முன்

5 வருட பருவ
மழைக்கு பின்

10.7

8.4

6.2

9.7

7.5

13.1

4.6

16.9

7.1

14.9

10.8

5.6

நீடித்த நிலைத்தன்மை:

நிலத்தடிநீர் நிலைப்பு தன்மையை உருவாக்கும் பொருட்டு மாநில மற்றும் மத்திய அரசு உதவியுடன் கீழ்க்கண்டவாறு நீர்செறிவூட்டும் கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளது.

வருவாய் உள்வட்டம் மூலம் வகைப்படுத்தல்:

நீர்பயன்பாட்டின் அடிப்படையில் இம்மாவட்டத்தை மார்ச் 2020-ம் ஆண்டில் வருவாய் உள்வட்டம் மூலம் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது.

நீர்வெளிக் கொணருதல் / பயன்பாடு அடிப்படையில் (மார்ச் 2020-ன்படி) வருவாய் உள்வட்டம் எண்ணிக்கை வருவாய் உள்வட்டங்கள்
அதிநுகர்வு நிலை ( 100 % மேல்) 3 அரும்புலியூர், திருபுலிவனம், ,வாலாஜாபாத்
அபாயகரமான நிலை ( 90 % - 100 %) 1 கோவிந்தவாடி .
மித அபாயகரமான நிலை (70 % - 90%) 6 கலியம்பூண்டி, குணவாக்கம் திருப்பக்குளி, உத்திரமேரூர் ,
சிறுகாவேரிபாக்கம், கொளப்பாக்கம்
பாதுகாப்பான நிலை (70 % உட்பட்ட) 15 சிட்லபாக்கம், குன்றத்தூர்,படப்பை, பருந்தூர், , மாகரல், மதுரமங்கலம்,
ஸ்ரீபெரும்பத்தூர், சுங்குவார்சத்திரம், , சாலவாக்கம், சிரப்பனஞ்சேரி, தண்டலம், தென்னேரி, வல்லம், மாங்காடு, காஞ்சிபுரம்
உவர் ஒன்றியங்கள் -  
மொத்தம் 25