Section: State-district-profile pages are not under access control

நீலகிரி மாவட்ட விவரக் குறிப்பு

  • நீலகிரி மாவட்டம் தமிழ்நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. வடக்கில் கர்நாடக மாநிலமும், கிழக்கில் ஈரோடு மாவட்டமும், தென்கிழக்கில் கோயம்புத்தூர் மாவட்டமும், தெற்கு மற்றும் மேற்கு கர்நாடக மாநிலம் எல்லைகளாக அமைந்துள்ளது.
  • இந்த மாவட்டத்தின் அட்சரேகை 110 10’ 00’’ முதல் 110 43’ 00’’ வரை வடக்கிலும் மற்றும் தீர்க்கரேகை 760 14’ 00’’முதல் 770 02’ 00’’ வரை கிழக்கிலும் அமைந்துள்ளது. இந்த மாவட்டமானது 2549 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது.

நில அமைப்பியல் மற்றும் வடிகால்:

  • நீலகிரி மாவட்டம் மலை மற்றும் குன்றுகளால் ஆனது.
  • இம்மாவட்டம் காவேரி வடிநிலத்தை கொண்டது. இங்குள்ள ஆறுகள் மலையின் சரிவுகளில் உண்டாகி, பல்லத்தாக்குகளில் ஓடுகின்றன.
  • மேலும் பல நீர்த்தேக்கங்கள் உள்ளன. இவை, குடிநீருக்கும் மின் உற்பத்திற்கு பயன்படுகிறது.
  • பைக்காரா நீர்த்தேக்கத்திலிருந்து கூடுதல் நீர் வடக்கு நோக்கி சென்று பின் கிழக்காக திரும்பி மோயாராக வடக்கு பகுதியில் செல்கிறது.
  • குந்தா நீர்த்தேக்கத்தின் உபரி நீர் பவாணி ஆறு வழியாக மேட்டுப்பாளையத்தை சென்றடைகிறது.

மழையளவு:

நீலகிரி மாவட்டத்தின் ஐந்தாண்டின் மழையளவு இந்திய வானியல் மையம், சென்னையின்படி கீழ்க்கண்டவாறு:

பெய்த மழையளவு மி.மீ. இயல்பான மழை மி.மீ.
2013 2014 2015 2016 2017
1534.1 1960.4 1720.9 888.5 1469.1 1522.7

புவியமைப்பியல்:

பாறை வகை புவி அமைப்புகள்
கடினப்பாறை (60 %) இலகு பாறை, கூழாங்கல் (வெ)

நிலத்தடிநீர் அளவு:

இந்த மாவட்டத்தில் மாதிரி கிணறுகள் அமையவில்லை. (மலை மற்றும் குன்றுகள்)

நீடித்த நிலைத்தன்மை:

நிலத்தடிநீர் நிலைப்பு தன்மை உருவாக்கும் பொருட்டு மாநில மற்றும் மத்திய அரசு உதவியுடன் கீழ்க்கண்டவாறு நீர்செறிவூட்டும் கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளது.

வருவாய் உள்வட்டம் மூலம் வகைப்படுத்தல்:

நீர் பயன்பாட்டின் அடிப்படையில் இம்மாவட்டத்தினை மார்ச் 2020-ம் ஆண்டில் வருவாய் உள்வட்டம் மூலம் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது.

நீர்வெளிக் கொணருதல் / பயன்பாடு அடிப்படையில் (மார்ச் 2020-ன்படி) வருவாய் உள்வட்டம் எண்ணிக்கை வருவாய் உள்வட்டங்கள்
அதிநுகர்வு நிலை ( 100 % மேல்) 0  
அபாயகரமான நிலை ( 90 % - 100 %) 0  
மித அபாயகரமான நிலை (70 % - 90%) 2 இத்தலார், குந்தா
பாதுகாப்பான நிலை (70 % உட்பட்ட) 13 குன்னூர், கூடலூர், கோத்தகிரி, கெட்டி, கீழ்கோத்தகிரி, நெடுங்குளா, பந்தலூர்,
மேலூர் சோலூர், துனேரி, தேவர்சோலா, சேரன்பாடி, உதகமண்டலம்
உவர் ஒன்றியங்கள் -  
மொத்தம் 15