Section: State-district-profile pages are not under access control

வேலூர் மாவட்ட விவரக் குறிப்பு

  • வேலூர் மாவட்டம், கிழக்கில் காஞ்சிபுரம் மாவட்டத்தையும், தெற்கில் திருவண்ணாமலை மாவட்டத்தையும், தர்மபுரி மாவட்டத்தையும், வடக்கில் ஆந்திர மாநிலத்தையும் எல்லையாகக் கொண்டுள்ளது.
  • இந்த மாவட்டத்தின் அட்சரேகை 120 15’ 23’’ முதல் 130 12’ 32’’ வரை வடக்கிலும் மற்றும் தீர்க்கரேகை 780 24’ 16’’ முதல் 790 54’ 56’’ வரை கிழக்கிலும் அமைந்துள்ளது. இந்த மாவட்டமானது 6077 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது.

நில அமைப்பியல் மற்றும் வடிகால்:

  • வேலூர் மாவட்டம் ஒரு மலைப்பாங்கான பகுதியாகும்.
  • இம்மாவட்டத்தின் சில பகுதிகள் சமதளப் பகுதிகளாக உள்ளது.
  • கிழக்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குப் பகுதியில் பாலாறு ஓடுகிறது.
  • இம் மாவட்டத்தில் சாய்தளம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இங்கு பாலாறு அதன் துணை நதியான மலட்டார், செய்யாறு, கென்னடியன் நதி, பொய்நே நதி ஆகியவை அமைந்துள்ளது.
  • பாலாறு மழைக்காலங்களில் மட்டுமே நீர் கொடுதிறன் நதியாக உள்ளது. செய்யார் பாலாற்றின் துணைநதியாகும்.
  • இது ஜவ்வாது மலையில் உருவாகிறது. .
  • பாலாற்றின் ஆற்று வண்டல் மண்ணின் அடர்த்தி அதிகம் உள்ளது.

மழையளவு:

வேலூர் மாவட்டத்தின் ஐந்தாண்டின் மழையளவு இந்திய வானியல் மையம், சென்னையின்படி கீழ்க்கண்டவாறு:

பெய்த மழையளவு மி.மீ. இயல்பான மழை மி.மீ.
2017 2018 2019 2020 2021
1042.4 601.2 827.2 1088.3 1433.6 985

புவியமைப்பியல்:

பாறை வகை புவி அமைப்புகள்
கடினப்பாறை 90 % சார்னகைட், நைஸ், கிரானைட், சைனிட்ஸ், பைராக்ஸினைட்
படிவுப்பாறை 10 % மணற்பாறை, வண்டல்மண், ஆற்று வண்டல்

நிலத்தடிநீர் அளவு:

இந்த மாவட்டத்தில் 53 மாதிரி கிணறுகள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் கண்காணிக்கப்படுகிறது. மழையளவானது பருவமழைக்கு முன்பும், பின்பும் நீர் அளவீடு செய்யப்படுகிறது. ஐந்தாண்டு மழையளவு கீழ்க்கண்டவாறு உள்ளது:

ஜன
2017

மே
2017

ஜன
2018

மே
2018

ஜன
2019

மே
2019

ஜன
2020

மே
2020

ஜன
2021

மே
2021

5 வருட பருவ
மழைக்கு முன்

5 வருட பருவ
மழைக்கு பின்

12.5

19.6

8.1

17.0

12.6

21.3

13.7

19.3

26.4

38.6

16.1 10.1

நீடித்த நிலைத்தன்மை:

நிலத்தடிநீர் நிலைப்பு தன்மையை உருவாக்கும் பொருட்டு மாநில மற்றும் மத்திய அரசு உதவியுடன் கீழ்க்கண்டவாறு நீர்செறிவூட்டும் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.

வருவாய் உள்வட்டம் மூலம் வகைப்படுத்தல்:

நீர் பயன்பாட்டின் அடிப்படையில் இம்மாவட்டத்தை மார்ச் 2020-ம் ஆண்டில் வருவாய் உள்வட்டம் மூலம் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது.

நீர்வெளிக் கொணருதல் / பயன்பாடு அடிப்படையில் (மார்ச் 2020-ன்படி) வருவாய் உள்வட்டம் எண்ணிக்கை வருவாய் உள்வட்டங்கள்
அதிநுகர்வு நிலை ( 100 % மேல்) 16 அகரம்,ஆம்பூர்,அணைக்கட்டு, குடியாத்தம் மேற்கு, குடியாத்தம் கிழக்கு, கே.வி. குப்பம்,மாதனூர், பள்ளிகொண்டா,
சத்துவாச்சேரி, துதிப்பட்டு, வடுகந்தாங்கல், வளத்தூர், மேலசன்னகுப்பம், மேல்பட்டி,ஒடுகத்தூர், வேலூர்.
அபாயகரமான நிலை ( 90 % - 100 %) 2 உசூர் ,பெண்ணாத்தூர்
மித அபாயகரமான நிலை (70 % - 90%) 4 கணியம்பாடி , காட்பாடி பேரணாம்பட்டு , திருவலம்
பாதுகாப்பான நிலை (70 % உட்பட்ட) 1 மேலபதி
உவர் ஒன்றியங்கள் -  
மொத்தம் 23