Section: State-district-profile pages are not under access control

திருவண்ணாமலை மாவட்ட விவரக் குறிப்பு

  • திருவண்ணாமலை மாவட்டம், வடக்கு மற்றும் வடமேற்கில் வேலூர் மாவட்டத்தையும், மேற்கில் தர்மபுரி மாவட்டத்தையும், தெற்கில் விழுப்புரம் மாவட்டத்தையும், கிழக்கில் காஞ்சிபுரம் மாவட்டத்தையும் எல்லையாகக் கொண்டுள்ளது.
  • இந்த மாவட்டத்தின் அட்சரேகை 120 00’ 00’’ முதல் 120 52’ 30’’ வரை வடக்கிலும் மற்றும் தீர்க்கரேகை 780 39’ 30’’ முதல் 790 45’ 36’’ வரை கிழக்கிலும் அமைந்துள்ளது. இந்த மாவட்டமானது 6190 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது.

நில அமைப்பியல் மற்றும் வடிகால்:

  • திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் மலைப்பாங்கான பகுதிகளும், மலைக்குன்றுகளும் மாவட்டத்தின் மேற்கு மற்றும் வடமேற்கு பகுதியில் உள்ளன.
  • மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் ஜவ்வாது மலை அமைந்துள்ளது. கிழக்குப் பகுதியில் மலைக்குன்றுகள் உள்ளன.
  • திருவண்ணாமலை மலைக்குன்று நகரத்தின் மத்திய பகுதியில் உள்ளது.
  • இதன் உயரம் 800 மீட்டர் ஆகும். மாவட்டத்தில் தனித்தனி மலையாகவும், மலைத்தொடராகவும், திருவண்ணாமலை, தாண்டராம்பட்டு, செங்கம், போளூர், ஆரணி, கலகப்பாக்கம் வட்டாரம் காணமுடிகிறது.
  • இந்த மாவட்டத்தில் பொன்னியாறு மற்றும் செய்யாறு பயணிக்கிறது.
  • மாவட்டத்தின் பெரும்பாலான பகுதி பாலாற்றின் நீர்பிடிப்பு பகுதியாக விளங்குகின்றது. தென்பகுதியில் பொன்னை ஆறுடைய நீர்பிடிப்பு பகுதி உள்ளது.

மழையளவு:

திருவண்ணாமலை மாவட்டத்தின் ஐந்தாண்டின் மழையளவு இந்திய வானியல் மையம், சென்னையின்படி கீழ்க்கண்டவாறு:

பெய்த மழையளவு மி.மீ. இயல்பான மழை மி.மீ.
2017 2018 2019 2020 2021
1251.3 799.2 1071.9 1034.5 1592.5 985

புவியமைப்பியல்:

பாறை வகை புவி அமைப்புகள்
கடினப்பாறை 90 % சார்னகைட், நைஸ், கிரானைட், மணற்பாறை, மென்களிக்கல்,
படிவுப்பாறை 10 % வண்டல்மண், ஆற்று வண்டல்

நிலத்தடிநீர் அளவு:

இந்த மாவட்டத்தில் 58 மாதிரி கிணறுகள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் கண்காணிக்கப்படுகிறது. மழையளவானது பருவமழைக்கு முன்பும், பின்பும் நீர் அளவீடு செய்யப்படுகிறது. ஐந்தாண்டு மழையளவு கீழ்க்கண்டவாறு உள்ளது:

ஜன
2017

மே
2017

ஜன
2018

மே
2018

ஜன
2019

மே
2019

ஜன
2020

மே
2020

ஜன
2021

மே
2021

5 வருட பருவ
மழைக்கு முன்

5 வருட பருவ
மழைக்கு பின்

10.9

15.0

3.5

7.8

7.2

15.9

5.1

107

2.5

5.5

10.6

5.3

நீடித்த நிலைத்தன்மை:

நிலத்தடிநீர் நிலைப்பு தன்மையை உருவாக்கும் பொருட்டு மாநில மற்றும் மத்திய அரசு உதவியுடன் கீழ்க்கண்டவாறு நீர்செறிவூட்டும் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.

வருவாய் உள்வட்டம் மூலம் வகைப்படுத்தல்:

நீர் பயன்பாட்டின் அடிப்படையில் இம்மாவட்டத்தை மார்ச் 2020-ம் ஆண்டில் வருவாய் உள்வட்டம் மூலம் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது.

நீர்வெளிக் கொணருதல் / பயன்பாடு அடிப்படையில் (மார்ச் 2020-ன்படி) வருவாய் உள்வட்டம் எண்ணிக்கை வருவாய் உள்வட்டங்கள்
அதிநுகர்வு நிலை ( 100 % மேல்) 23 செங்கம், சென்னாவரம் , இறையூர், கடலாடி தேசூர் , கேட்டவரம்பாளையம், கீழ்கொடுங்கலூர் ,
கேளூர், மழையூர், கோலபள்ளூர் ,ஓசூர், பாச்சல், புதுப்பாளையம், மேல்பள்ளிப்பட்டு, சோமஸ்பாடி, தனிப்பாடி,
தச்சம்பட்டு, துருஞ்சிபுரம், நெடுங்குளம், சந்தவாசல் தச்சம்பாடி, வேட்டவலம், முள்ளிப்பட்டு
அபாயகரமான நிலை ( 90 % - 100 %) 6 கீழ்பெண்ணாத்தூர் , மங்களம், வந்தவாசி, வடதண்டலம், வேரையூர், மொடையூர்
மித அபாயகரமான நிலை (70 % - 90%) 23 அனகாவூர், , ஆரணி வனபுரம், செய்யார், நாயுடுமங்கலம், அகரபாளையம், பெரணமநல்லூர் கண்ணமங்கலம்,
தூசி, மண்டகொளத்தூர், கலசப்பாக்கம், , நாட்டேரி, பெருங்காட்டூர் , சத்தியவிஜயநகரம் தாண்ட்ராம்பேட் தேத்துறை, போளூர்,
தெள்ளார், திருவண்ணாமலை (தெ), திருவண்ணாமலை (வ), வக்கடை, வெம்பாக்கம், தேவிகாபுரம்
பாதுகாப்பான நிலை (70 % உட்பட்ட) 0  
உவர் ஒன்றியங்கள் -  
மொத்தம் 52