Section: State-district-profile pages are not under access control

தூத்துக்குடி மாவட்ட விவரக் குறிப்பு

  • இம்மாவட்டத்தின் மொத்த மக்கட் தொகை 1847980 ஆகும். இவற்றில் 8,76,802 நகரகப் பகுதிகளிலும் 971178 ஊரகப் பகுதிகளிலும் வசிக்கின்றனர்.
  • தூத்துக்குடி மாவட்டமானது தமிழ்நாட்டின் தென்கிழக்கில் அமைந்துள்ளது. இம்மாவட்டமானது வடக்கில் விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டம், கிழக்கில் வங்காள விரிகுடாவும், மேற்கு மற்றும் தென்மேற்காக திருநெல்வேலி மாவட்டத்தையும் எல்லையாகக் கொண்டுள்ளது.
  • இந்த மாவட்டத்தின் அட்சரேகை 80 19’ 00’’ முதல் 90 20’ 00’’ வரை வடக்கிலும் மற்றும் தீர்க்கரேகை 770 40’ 00’’ முதல் 780 10’ 00’’ வரை கிழக்கிலும் அமைந்துள்ளது. இந்த மாவட்டமானது 4621 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது.

நில அமைப்பியல் மற்றும் வடிகால்:

  • தூத்துக்குடி மாவட்டம் கடலோர மாவட்டங்களில் ஒன்று.
  • இம்மாவட்ட நதி மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகி வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
  • சில ஓடைகள் மலைகளில் தோன்றி அம்மாவட்டத்திலேயே கலக்கிறது.
  • வைப்பார், தாமிரபரணி, கருமேனியாறு ஆகிய நதிகள் ஓடுகின்றன.
  • தாமிரபரணி முக்கிய வற்றா நதியாகும். இதன் துணை நதியான காரையாறு, சேர்வலாறு, மணிமுத்தாறு, கடனா நதி ஆகியவை ஓடுகின்றன.

மழையளவு:

தூத்துக்குடி மாவட்டத்தின் ஐந்தாண்டின் மழையளவு இந்திய வானியல் மையம், சென்னையின்படி கீழ்க்கண்டவாறு:

பெய்த மழையளவு மி.மீ. இயல்பான மழை மி.மீ.
2017 2018 2019 2020 2021
514.6 561.6 668.3 568.1 9307 985

புவியமைப்பியல்:

பாறை வகை புவி அமைப்புகள்
கடினப்பாறை 73%
படிவுப்பாறை 27% ஆற்று வண்டல், வண்டல்மண் மற்றும் கடற்படிவங்கள்

நிலத்தடிநீர் அளவு:

இந்த மாவட்டத்தில் 49 மாதிரி கிணறுகள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் கண்காணிக்கப்படுகிறது. மழையளவானது பருவமழைக்கு முன்பும், பின்பும் நீர் அளவீடு செய்யப்படுகிறது. ஐந்தாண்டு மழையளவு கீழ்க்கண்டவாறு உள்ளது:

ஜன
2017

மே
2017

ஜன
2018

மே
2018

ஜன
2019

மே
2019

ஜன
2020

மே
2020

ஜன
2021

மே
2021

5 வருட பருவ
மழைக்கு முன்

5 வருட பருவ
மழைக்கு பின்

8.2

11.3

5.6

7.9

5.5

9.8

4.7

5.1

2.3

2.4

6.5 4.8

நீடித்த நிலைத்தன்மை:

நிலத்தடிநீர் நிலைப்பு தன்மையை உருவாக்கும் பொருட்டு மாநில மற்றும் மத்திய அரசு உதவியுடன் கீழ்க்கண்டவாறு நீர்செறிவூட்டும் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது..

வருவாய் உள்வட்டம் மூலம் வகைப்படுத்தல்:

நீர் பயன்பாட்டின் அடிப்படையில் இம்மாவட்டத்தை மார்ச் 2020-ம் ஆண்டில் வருவாய் உள்வட்டம் மூலம் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது.

நீர்வெளிக் கொணருதல் / பயன்பாடு அடிப்படையில் (மார்ச் 2020-ன்படி) வருவாய் உள்வட்டம் எண்ணிக்கை வருவாய் உள்வட்டங்கள்
அதிநுகர்வு நிலை ( 100 % மேல்) 3 இளையரசனேந்தல், பள்ளக்குறிச்சி, உடன்குடி
அபாயகரமான நிலை ( 90 % - 100 %) 1 பாரிவள்ளிக்கோட்டை
மித அபாயகரமான நிலை (70 % - 90%) 2 கயத்தாறு, சாத்தான்குளம்
பாதுகாப்பான நிலை (70 % உட்பட்ட) 35 கடம்பூர், ஒட்டப்பிடாரம் ஆழ்வார்திருநகரி, ஆறுமுகமங்கலம், ஆத்தூர், சோழபுரம், தெய்வசெயல்புரம், எப்போதும்வென்றான், எட்டயபுரம்,
கடலியூர், கடல்குடி, கழுகுமலை, காமநாயக்கன்பட்டி, குளத்தூர், மணியாச்சி, முடிவைத்தனேந்தல், முத்துலாபுரம், நல்லாட்டின்புதூர்,
படர்ந்தபுலி, பசுவந்தனை, பெருங்குளம், புதுக்கோட்டை (டி), புதூர், செய்துங்கநல்லூர், சிவஞானநல்லூர், ஸ்ரீவைகுண்டம்,
ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம், விளாத்திகுளம், கோவில்பட்டி, தூத்துக்குடி, கிஈழத்தாட்டப்பாறை திருச்செந்தூர், வல்லநாடு, வடநத்தம், வேம்பார்
உவர் ஒன்றியங்கள் -  
மொத்தம் 41