Section: State-district-profile pages are not under access control

திருச்சிராப்பள்ளி மாவட்ட சுயவிவரம்

  • திருச்சிராப்பள்ளி மாவட்டமானது தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் ஒன்றாகவும் மற்றும் மத்திய பகுதியாகவும் அமைந்துள்ளது.
  • இம்மாவட்டமானது வடக்கில் பெரம்பலூர் மாவட்டத்தையும், வடகிழக்கில் அரியலூர் மாவட்டத்தையும், மேற்கில் கரூர் மாவட்டத்தையும், கிழக்கில் தஞ்சாவூர் மாவட்டத்தையும் எல்லையாகக் கொண்டுள்ளது.
  • இந்த மாவட்டத்தின் அட்சரேகை 100 17’ 00’’ முதல் 110 25’ 00’’ வரை வடக்கிலும் மற்றும் தீர்க்கரேகை 780 09’ 00’’ முதல் 790 03’ 00’’ வரை கிழக்கிலும் அமைந்துள்ளது. இந்த மாவட்டமானது 4511 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது.

நில அமைப்பியல் மற்றும் வடிகால்:

  • திருச்சிராப்பள்ளி மாவட்டம் சமதளமான பகுதிகளைக் கொண்டது. காவேரி மற்றும் கொள்ளிடம் ஆறு மத்தியப் பகுதியில் ஓடுகிறது.
  • மாவட்டம் முழுவதும் காவேரி வடிநிலம் மற்றும் அதன் துணையாறுகளான அய்யார், உப்பார், மருதையாறு, பொன்னையாறு, கோரையார் மற்றும் வெள்ளாறு ஓடுகிறது.
  • மாவட்டத்தின் மேற்கு மற்றும் தென் பகுதியில் மலைக்குன்றுகள் உள்ளன. நகரத்தின் மத்தியில் மலைக்கோட்டை உள்ளது.

மழையளவு:

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் ஐந்தாண்டின் மழையளவு இந்திய வானியல் மையம், சென்னையின்படி கீழ்க்கண்டவாறு:

பெய்த மழையளவு மி.மீ. இயல்பான மழை மி.மீ.
2017 2018 2019 2020 2021
690.0 506.6 635.0 796.6 1222.7 985

புவியமைப்பியல்:

பாறை வகை புவி அமைப்புகள்
கடினப்பாறை 95% சார்னகைட், நைஸ், கிரானைட், குவார்ட்சைட், பெக்மடைட்
படிவுப்பாறை 5% மணற்பாறை, சுண்ணாம்புக்கல், மென்களிக்கல், ஆற்று வண்டல்

நிலத்தடிநீர் அளவு:

இந்த மாவட்டத்தில் 45 மாதிரி கிணறுகள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் கண்காணிக்கப்படுகிறது. மழையளவானது பருவமழைக்கு முன்பும், பின்பும் நீர் அளவீடு செய்யப்படுகிறது. ஐந்தாண்டு மழையளவு கீழ்க்கண்டவாறு உள்ளது:

ஜன
2017

மே
2017

ஜன
2018

மே
2018

ஜன
2019

மே
2019

ஜன
2020

மே
2020

ஜன
2021

மே
2021

5 வருட பருவ
மழைக்கு முன்

5 வருட பருவ
மழைக்கு பின்

15.1

18.5

15.7

19.1

20.6

23.1

19.8

22.5

18.3

20.7

17.6 15.2

நீடித்த நிலைத்தன்மை:

நிலத்தடிநீர் நிலைப்பு தன்மையை உருவாக்கும் பொருட்டு மாநில மற்றும் மத்திய அரசு உதவியுடன் கீழ்க்கண்டவாறு நீர்செறிவூட்டும் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.

வருவாய் உள்வட்டம் மூலம் வகைப்படுத்தல்:

நீர் பயன்பாட்டின் அடிப்படையில் இம்மாவட்டத்தை மார்ச் 2020-ம் ஆண்டில் வருவாய் உள்வட்டம் மூலம் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது.

நீர்வெளிக் கொணருதல் / பயன்பாடு அடிப்படையில் (மார்ச் 2020-ன்படி) வருவாய் உள்வட்டம் எண்ணிக்கை வருவாய் உள்வட்டங்கள்
அதிநுகர்வு நிலை ( 100 % மேல்) 17 கண்ணனூர், கரியமாணிக்கம், எராக்குடி கொப்பம்பட்டி, மணிகண்டம், மணப்பாறை, வையம்பட்டி, தும்பாலம், மருங்காபுரி, பண்ணப்பட்டி,
துவரங்குறிச்சி, தாத்தைய்யங்கார்பேட்டை, துறையூர், வளையெடுப்பு, செங்காட்டுப்பட்டி, வி.பெரியபட்டி, புலிவலம்
அபாயகரமான நிலை ( 90 % - 100 %) 1 உப்பிலியாபுரம்
மித அபாயகரமான நிலை (70 % - 90%) 8 ஏழூர்பட்டி, காட்டுப்புத்தூர், மண்ணச்சநல்லூர், முசிறி, சிறுகம்பூர், பெருவால்பூர், தொட்டியம் வளநாடு
பாதுகாப்பான நிலை (70 % உட்பட்ட) 17 ஆமூர், அன்பில், ஆண்டநல்லூர், கள்ளக்குடி, குழுமணி, லால்குடி, நாவல்பட்டு, புள்ளம்பாடி, வெங்கூர், சோமரசன்பேட்டை.
ஸ்ரீ ரங்கம், திருவெறும்பூர், திருச்சி வடக்கு, திருச்சி தெற்கு, வாலாடி, திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு.
உவர் ஒன்றியங்கள் -  
மொத்தம் 43  
Top