Section: State-district-profile pages are not under access control

சிவகங்கை மாவட்ட விவரக் குறிப்பு

  • இம்மாவட்டத்தின் மொத்த மக்கட் தொகை 1388641 ஆகும். இவற்றில் 415631 மக்கள் நகரகப் பகுதிகளிலும் 973010 மக்கள் ஊரகப் பகுதிகளிலும் வசிக்கின்றனர்.
  • சிவகங்கை மாவட்டமானது வடகிழக்காக புதுக்கோட்டை மாவட்டமும், கிழக்கில் இராமநாதபுரம் மாவட்டமும், தென்மேற்கில் விருதுநகர் மாவட்டமும், மற்றும் மேற்கில் மதுரை மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளது.
  • இந்த மாவட்டத்தின் அட்சரேகை 900 30’ முதல் 100 25’ வரை வடக்கிலும் மற்றும் தீர்க்கரேகை 780 07’முதல் 790 01’ வரை கிழக்கிலும் அமைந்துள்ளது. இந்த மாவட்டமானது 4143 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது.

நில அமைப்பியல் மற்றும் வடிகால்:

  • சிவகங்கை மாவட்டத்தில் வடக்கு பகுதியில் பாம்பார், மணிமுத்தார், சருகனி ஆறு ஆகியவை ஓடுகின்றன.
  • தென்பகுதியில் வைகை ஆறு ஓடுகிறது. மாவட்டத்தின் வடக்கு மற்றும் மேற்கு பகுதி திருப்பத்தூர் தாலுக்காக மலை பாங்கான பகுதியாக விளங்குகிறது.
  • இதன் வடகிழக்கிலிருந்து தென்மேற்கு பகுதிகளான புலியால் முதல் மானாமதுரை வரை நிலமட்டம் உயர்வாக காணப்படுகிறது. இதர பகுதிகள் சமதளமாக விளங்குகின்றன.

மழையளவு:

சிவகங்கை மாவட்டத்தின் ஐந்தாண்டின் மழையளவு இந்திய வானியல் மையம், சென்னையின்படி கீழ்க்கண்டவாறு:

பெய்த மழையளவு மி.மீ. இயல்பான மழை மி.மீ.
2017 2018 2019 2020 2021
967.5 932.6 966.4 1112.0 1270.8 985

புவியமைப்பியல்:

பாறை வகை புவி அமைப்புகள்
கடினப்பாறை (40 % ) இலகு பாறை, கூழாங்கல் (வெ), வண்டல் மண்.
படிவுப்பாறை (60 % ) மணல்கல், சிகப்பு மண்கல், வண்டல்மண், வண்டல்மண் படிவம், கூழாங்கல்.

நிலத்தடிநீர் அளவு:

இந்த மாவட்டத்தில் 79 மாதிரி கிணறுகள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் கண்காணிக்கப்படுகிறது. மழையளவானது பருவமழைக்கு முன்பும், பின்பும் நீர் அளவீடு செய்யப்படுகிறது. ஐந்தாண்டு மழையளவு கீழ்க்கண்டவாறு உள்ளது:

ஜன
2017

மே
2017

ஜன
2018

மே
2018

ஜன
2019

மே
2019

ஜன
2020

மே
2020

ஜன
2021

மே
2021

5 வருட பருவ
மழைக்கு முன்

5 வருட பருவ
மழைக்கு பின்

20.7

25.7

23.6

25.5

24.5

26.3

16.6

17.3

13.07

14.7

18.7 17.0

நீடித்த நிலைத்தன்மை:

நிலத்தடிநீர் நிலைப்பு தன்மையை உருவாக்கும் பொருட்டு மாநில மற்றும் மத்திய அரசு உதவியுடன் கீழ்க்கண்டவாறு நீர்செறிவூட்டும் கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளது.

வருவாய் உள்வட்டம் மூலம் வகைப்படுத்தல்:

நீர் பயன்பாட்டின் அடிப்படையில் இம்மாவட்டத்தை மார்ச் 2020-ம் ஆண்டில் வருவாய் உள்வட்டம் மூலம் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது.

நீர்வெளிக் கொணருதல் / பயன்பாடு அடிப்படையில் (மார்ச் 2020-ன்படி) வருவாய் உள்வட்டம் எண்ணிக்கை வருவாய் உள்வட்டங்கள்
அதிநுகர்வு நிலை ( 100 % மேல்) 0  
அபாயகரமான நிலை ( 90 % - 100 %) 0  
மித அபாயகரமான நிலை (70 % - 90%) 0  .
பாதுகாப்பான நிலை (70 % உட்பட்ட) 39 காளையார்கோவில், சிவகங்கை, தேவக்கோட்டை, இளையாங்குடி, கல்லல், கண்ணன்குடி, மானாமதுரை, சாக்கோட்டை, சிங்கம்புணரி,
திருப்பத்தூர், திருப்புவனம், ஏ.திருத்துறைபுரம், இளையாத்தான்குடி, கண்டதேவி, காரைக்குடி, கொன்தகை, மல்லல், மரவமங்கலம், மதுப்பட்டி,
மித்ராவயல், முத்தநேந்தல், நாச்சியார்புரம், நாட்டரசன்-கோட்டை, நெற்குப்பை, ஒக்கூர், பல்லத்தூர், பெரியகோட்டை (தெ), புளியால், எஸ்.எஸ். கோட்டை,
சாலகிராமம், சருகனி, செய்களத்தூர், சூராணம், தமராகி, தாயமங்கலம், திருக்கோஷ்டியூர், திருப்பாச்சேத்தி, சிலுக்குப்பட்டி, வரப்பூர்
உவர் ஒன்றியங்கள் -  
மொத்தம் 39