Section: State-district-profile pages are not under access control

தஞ்சாவூர் மாவட்ட சுயவிவரம்

  • தஞ்சாவூர் மாவட்டத்தின் கிழக்கில் திருவாரூர் மாவட்டமும், தென் கிழக்காக மன்னார் வளைகுடாவும், தெற்கு மற்றும் தென்மேற்கில் புதுக்கோட்டை மாவட்டமும் மேற்கு மற்றும் வடமேற்கில் திருச்சி மாவட்டமும் வடகிழக்கில் அரியலூர் மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளது.
  • இந்த மாவட்டத்தின் அட்சரேகை 100 09’ 00’’ முதல் 110 14’ 00’’ வரை வடக்கிலும் மற்றும் தீர்க்கரேகை 780 50’ 00’’முதல் 790 33’ 30’’ வரை கிழக்கிலும் அமைந்துள்ளது. இந்த மாவட்டமானது 3476 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது.

நில அமைப்பியல் மற்றும் வடிகால்:

  • தஞ்சாவூர் மாவட்டம் காவிரியின் வளநாடு பகுதியாக உள்ளது.
  • கொள்ளிடம் ஆறு மாவட்டத்தின் வடக்கு பகுதியில் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஓடுகிறது. இதன் வடக்கு பகுதியில் கல்லணை அமைந்துள்ளது.
  • காவிரி வெண்ணாறு மற்றும் புதுவளநாடு உபவடிநிலமாக உள்ளது மற்றும் பெரிய பருவமழை ஆறாக காட்டாறு, அக்னி ஆறு, நசுவின் ஆறு ஆகியவை மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியும் மற்றும் தென் பகுதியிலும் ஓடுகிறது.

மழையளவு:

தஞ்சாவூர் மாவட்டத்தின் ஐந்தாண்டின் மழையளவு இந்திய வானியல் மையம், சென்னையின்படி கீழ்க்கண்டவாறு:

பெய்த மழையளவு மி.மீ. இயல்பான மழை மி.மீ.
2017 2018 2019 2020 2021
1077.0 703.8 942.3 968.1 1779.7 985

புவியமைப்பியல்:

பாறை வகை புவி அமைப்புகள்
கடினப்பாறை (3 % ) இலகு பாறை, கூழாங்கல் (வெ), வண்டல் மண்
படிவுப்பாறை (97 % ) கருப்புகளி, மணல்கல், சிகப்பு மண்கல், வண்டல்மண், வண்டல்மண் படிவம், கூழாங்கல்.

நிலத்தடிநீர் அளவு:

இந்த மாவட்டத்தில் 35 மாதிரி கிணறுகள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் கண்காணிக்கப்படுகிறது. மழையளவானது பருவமழைக்கு முன்பும், பின்பும் நீர் அளவீடு செய்யப்படுகிறது. ஐந்தாண்டு மழையளவு கீழ்க்கண்டவாறு உள்ளது:

ஜன
2017

மே
2017

ஜன
2018

மே
2018

ஜன
2019

மே
2019

ஜன
2020

மே
2020

ஜன
2021

மே
2021

5 வருட பருவ
மழைக்கு முன்

5 வருட பருவ
மழைக்கு பின்

22.2

28.0

20.6

27.0

22.2

24.7

18.7

21.1

16.6

19.3

20.3 17.1

நீடித்த நிலைத்தன்மை:

நிலத்தடிநீர் நிலைப்பு தன்மை உருவாக்கும் பொருட்டு மாநில மற்றும் மத்திய அரசு உதவியுடன் கீழ்க்கண்டவாறு நீர்செறிவூட்டும் கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளது.

வருவாய் உள்வட்டம் மூலம் வகைப்படுத்தல்:

நீர் பயன்பாட்டின் அடிப்படையில் இம்மாவட்டத்தினை மார்ச் 2020-ம் ஆண்டில் வருவாய் உள்வட்டம் மூலம் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது.

நீர்வெளிக் கொணருதல் / பயன்பாடு அடிப்படையில் (மார்ச் 2020படி) வருவாய் உள்வட்டம் எண்ணிக்கை வருவாய் உள்வட்டங்கள்
அதிநுகர்வு நிலை ( 100 % மேல்) 34 அதிராம்பட்டினம் ,திருவரங்குறிச்சி, ஆடுதுறை, அம்மாபேட்டை, அகரப்பேட்டை, கவிஸ்தலம் அண்டைக்காடு, ஆவணம்,
கண்டியூர், கதிராமங்கலம், காவளிப்பட்டி குருவைகரம்பை, மதுக்கூர், மேலாத்தூர், முருக்கன்குடி,
நாச்சியார் கோவில், நடுக்காவேரி, நாஞ்சிக்கோட்டை, பாண்டநல்லூர், இராமாபுரம், பட்டுக்கோட்டை தொண்டராம் பட்டு,
திருச்சிற்றம்பலம், வல்லம், அய்யம்பேட்டை, தேவனச்சேரி, சிலாத்தூர், கும்பகோணம், பாபநாசம், திருப்பனந்தால்,
திருக்காட்டுப்பள்ளி திருவையாறு, திருமங்கலக்கோட்டை திருவிடைமருதூர்
அபாயகரமான நிலை ( 90 % - 100 %) 4 நம்பிவயல், பெரியகோட்டை தம்பிகோட்டை, , உள்ளூர்
மித அபாயகரமான நிலை (70 % - 90%) 08 பூதலூர்,ஒரத்தநாடு , குறிஞ்சி, பெரும்பூர், பேராவூரணி , தஞ்சாவூர், தெக்கூர்
பாதுகாப்பான நிலை (70 % உட்பட்ட) 4 சோழன்மாளிகை, ஈச்சன்கோட்டை,பெருமகளூர், சாலியாமங்களம், சிங்கிப்பட்டி
உவர் ஒன்றியங்கள்    
மொத்தம் 50