புதுக்கோட்டை மாவட்ட சுயவிவரம்
- புதுக்கோட்டை மாவட்டமானது கிழக்கில் தஞ்சாவூர் மாவட்டமும், வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் திருச்சி மாவட்டமும், தெற்கில் ராமநாதபுரம் மாவட்டமும், மற்றும் தென் கிழக்கில் வங்காள விரிகுடாவும் எல்லைகளாக அமைந்துள்ளன.
- இந்த மாவட்டத்தின் அட்சரேகை 90 51’ 00” முதல் 100 44’ 40’’ வரை வடக்கிலும் மற்றும் தீர்க்கரேகை 780 25’ 30’’முதல் 790 16’ 15’’ வரை கிழக்கிலும் அமைந்துள்ளது. இந்த மாவட்டமானது 4651 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது.
நில அமைப்பியல் மற்றும் வடிகால்:
- புதுக்கோட்டை மாவட்டம் கரடு முரடான நிலப்பரப்பை கொண்டிருந்தாலும், ஒரு சில பகுதி சமதளமாகவும் உள்ளது. இச்சமதளம் கிழக்கு மற்றும் வடகிழக்கில் கடலை நோக்கி உள்ளது.
- பெரிய மலைத் தொடர் ஏதும் இல்லாதபோதிலும், திருமயம், குடுமியான்மலை, சித்தன்னவாசல், விராலிமலை, நர்த்தாமலை ஆகிய மலைக்குன்றுகள் உள்ளன.
- வற்றாத நதி இல்லாதபோதும் அக்கினயாறு, வெள்ளாறு, கோரையாறு, குண்டாறு போன்ற பருவ காலங்களில் ஓடக்கூடிய நதிகள் உள்ளன.
- வெள்ளாறு மற்றும் பாம்பார் வடமேற்கில் இருந்து தென்கிழக்கு நோக்கி ஓடுகின்றன. இந்த ஆறானது சுமார் 5041 கண்மாய்களை இணைக்கின்றன. இது மழைநீரை சேமிக்க ஏதுவாக உள்ளது.
மழையளவு:
புதுக்கோட்டை மாவட்டத்தின் ஐந்தாண்டின் மழையளவு இந்திய வானியல் மையம், சென்னையின்படி கீழ்க்கண்டவாறு:
பெய்த மழையளவு மி.மீ. | இயல்பான மழை மி.மீ. | ||||
---|---|---|---|---|---|
2017 | 2018 | 2019 | 2020 | 2021 | |
724.4 | 692.1 | 876.2 | 947.6 | 1188.7 | 985 |
புவியமைப்பியல்:
பாறை வகை | புவி அமைப்புகள் | ||||
கடினப்பாறை (60 %) | படிவுப்பாறை (40 %) | ||||
கரும்பாறை மற்றும் இலகு பாறை வண்டல் மண் | மணல்கல், வண்டல்மண், கடல் படிமண் |
நிலத்தடிநீர் அளவு:
இந்த மாவட்டத்தில் 24 மாதிரி கிணறுகள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் கண்காணிக்கப்படுகிறது. மழையளவானது பருவமழைக்கு முன்பும், பின்பும் நீர் அளவீடு செய்யப்படுகிறது. ஐந்தாண்டு மழையளவு கீழ்க்கண்டவாறு உள்ளது:
ஜன |
மே |
ஜன |
மே |
ஜன |
மே |
ஜன |
மே |
ஜன |
மே |
5 வருட பருவ |
5 வருட பருவ |
30.2 |
35.5 |
33.8 |
32.2 |
41.0 |
43.9 |
38.7 |
25.3 |
30.3 |
22.3 |
27.0 | 30.4 |
நீடித்த நிலைத்தன்மை:
நிலத்தடிநீர் நிலைப்பு தன்மையை உருவாக்கும் பொருட்டு மாநில மற்றும் மத்திய அரசு உதவியுடன் கீழ்க்கண்டவாறு நீர்செறிவூட்டும் கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளது.
நீர்செறிவூட்டும் கட்டமைப்புகள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
தடுப்பணை | கசிவு நீர் குட்டை | செறிவூட்டு பள்ளங்கள் | செறிவூட்டு படுகை | மற்றவை | ஊரணி | பழுதான ஆழ்குழாய் செறிவூட்டல் | நீர் செறிவூட்டுக் குழாய்கள் | மேற்கூரை மழைநீர் சேகரிப்பு கட்டமைப்கள் | நீரழுத்த பாறை வெடிப்பு | மொத்தம் |
7 | 45 | 19 | 169 | 15 | 40 | 17 | 312 |
வருவாய் உள்வட்டம் மூலம் வகைப்படுத்தல்:
நீர்பயன்பாட்டின் அடிப்படையில் இம்மாவட்டத்தை மார்ச் 2020-ம் ஆண்டில் வருவாய் உள்வட்டம் மூலம் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது.
நீர்வெளிக் கொணருதல் / பயன்பாடு அடிப்படையில் (மார்ச் 2013-ன்படி) | வருவாய் உள்வட்டம் எண்ணிக்கை | வருவாய் உள்வட்டங்கள் |
---|---|---|
அதிநுகர்வு நிலை ( 100 % மேல்) | 0 | |
அபாயகரமான நிலை ( 90 % - 100 %) | 0 | |
மித அபாயகரமான நிலை (70 % - 90%) | 10 | அரசர்குளம், கீரமங்கலம், காரையூர், விராலிமலை, அரசமலை, கொடும்பலூர், கோட்டூர் (ப, நார்த்த-மலை, பொன்னமராவதி, வண்ணவல்குடி |
பாதுகாப்பான நிலை (70 % உட்பட்ட) | 32 | ஆலங்குடி, ஆதனை, அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், கந்தர்வக்கோட்டை, குண்ணாண்டார்கோவில், இலுப்பூர், ஏம்பல், மணமேல்குடி, ,புதுக்கோட்டை, கல்லக்கோட்டை, கீழநிலை, கீரனூர், கீழ்கோட்டை, , குடுமியான்-மலை, மலையூர், மீமிசல், நாக்குடி, , நீரபழனி, பொன்பட்டி, பூவாத்தங்குடி. புதுநகர், செங்கீரை, சிலாத்தூர், சித்தன்னவாசல், வலநாடு, திருமயம், கரம்பக்குடி, வீரப்பட்டி, வார்ப்புரு, விரைச்சிலை, மாத்தூர். |
உவர் ஒன்றியங்கள் | 3 | கோட்டைபட்டினம், பெருமாத்தூர், சிங்கவனம் |
மொத்தம் | 45 |