Section: State-district-profile pages are not under access control

கோயமுத்தூர் மாவட்ட விவரக் குறிப்பு

  • கோயம்புத்தூர் மாவட்டமானது, கேரள மாநிலம் மேற்கு மற்றும் தெற்கு பகுதியையும் எல்லையாகக் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தின் திருப்பூர் கிழக்கு எல்லையாக உள்ளது. நீலகிரியில் ஒரு பகுதியும், ஈரோடு மாவட்ட ஒரு பகுதியும் வடக்கு எல்லையாக உள்ளது.
  • இந்த மாவட்டத்தின் அட்சரேகை 100 13’ 00’’ முதல் 110 23’ 30’’ வரை வடக்கிலும் மற்றும் தீர்க்கரேகை 760 39’ 00’’ முதல் 770 30’ 00’’ வரை கிழக்கிலும் அமைந்துள்ளது. இந்த மாவட்டமானது 7649 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது.

நில அமைப்பியல் மற்றும் வடிகால்:

  • கோயம்புத்தூர் மாவட்டத்தின் வடமேற்கு பகுதி மற்றும் தென்பகுதி ஆகியவை மேற்கு தொடர்ச்சி மலையால் சூழப்பட்டுள்ளது.
  • நீலகிரி மலை வடமேற்கு பகுதியிலும் ஆணை மலை தென் பகுதியிலும் சூழ்ந்துள்ளது. இம்மாவட்டத்தின் பெறும்பாலான பகுதி காவிரி வடிநிலத்தைக் கொண்டது.
  • தென்மேற்கு பகுதி பொன்னி ஆற்றை வடிநிலமாகக் கொண்டுள்ளது. காவிரி துணை நதியான பவாணி, நொய்யல் மற்றும் அமராவதி ஆகியவை பாய்கின்றன.
  • தென்மேற்கு பகுதியில் பொன்னியின் துணை நதியான பாலாறு, ஆழியாறு, மற்றும் உப்பாறு ஆகியவை ஆணை மலையிலிருந்து தோன்றுகிறது.

மழையளவு:

கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஐந்தாண்டின் மழையளவு இந்திய வானியல் மையம், சென்னையின்படி கீழ்க்கண்டவாறு:

பெய்த மழையளவு மி.மீ. இயல்பான மழை மி.மீ.
2017 2018 2019 2020 2021
901.0 1221.7 992.9 1036.5 873.4 689.37

புவியமைப்பியல்:

பாறை வகை புவி அமைப்புகள்
கடினப்பாறை கரும்பாறை

நிலத்தடிநீர் அளவு:

இந்த மாவட்டத்தில் 39 மாதிரி கிணறுகள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் கண்காணிக்கப்படுகிறது. மழையளவானது பருவமழைக்கு முன்பும், பின்பும் நீர் அளவீடு செய்யப்படுகிறது. ஐந்தாண்டு மழையளவு கீழ்க்கண்டவாறு உள்ளது:

ஜன
2017

மே
2017

ஜன
2018

மே
2018

ஜன
2019

மே
2019

ஜன
2020

மே
2020

ஜன
2021

மே
2021

5 வருட பருவ
மழைக்கு முன்

5 வருட பருவ
மழைக்கு பின்

20.4

29.6

19.8

22.3

13.7

17.6

109

14.6

9.3

13.0

16.5 12.6

நீடித்த நிலைத்தன்மை:

நிலத்தடிநீர் நிலைப்பு தன்மையை உருவாக்கும் பொருட்டு மாநில மற்றும் மத்திய அரசு உதவியுடன் கீழ்க்கண்டவாறு நீர்செறிவூட்டும் கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளது.

வருவாய் உள்வட்டம் மூலம் வகைப்படுத்தல்:

நீர் பயன்பாட்டின் அடிப்படையில் இம்மாவட்டத்தை மார்ச் 2020-ம் ஆண்டில் வருவாய் உள்வட்டம் மூலம் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது.

நீர்வெளிக் கொணருதல் / பயன்பாடு அடிப்படையில் (மார்ச் 2020-ன்படி) வருவாய் உள்வட்டம் எண்ணிக்கை வருவாய் உள்வட்டங்கள்
அதிநுகர்வு நிலை ( 100 % மேல்) 30 ஆலந்துறைஅந்நூர் நார்த் அந்நூர் சவுத், அனுபற்பலயம் கோவை,கணபதி காரமடை,கருமத்துப்பட்டி கிண்ணத்துக்காட்டவு
கோலார்பட்டி,கோவில்பாளையம் மடம்பட்டி,மடத்துக்கரை மேட்டுப்பாளையம் ஓட்டுக்கள்,மணடபம் பெரியனேகமாம் பெரியநாசிகையன்பாளையம்
பேரூர்,பொள்ளாச்சி நார்த் பொள்ளாச்சி சவுத்,ராம்பட்டினம் சர்க்கார்,சாமக்குளம் சரவணம்பட்டி,சலக்கரைச்சல் சிங்காநல்லூர்,
திருமலையம்பாளையம் தொண்டாமுத்தூர்,வேடச்சித்தூர் வடவள்ளி,வரப்பட்டி
அபாயகரமான நிலை ( 90 % - 100 %) 2 கோட்டூர்,சூலூர்
மித அபாயகரமான நிலை (70 % - 90%) 5 ஆனைமலை,குன்னிமுத்துர் குறிச்சி மச்சினயக்கன்பாளையம் தொழுதூர்
பாதுகாப்பான நிலை (70 % உட்பட்ட) 1 வாழப்பறை
உவர் ஒன்றியங்கள் -  
மொத்தம் 38