கிருஷ்ணகிரி மாவட்ட விவரக் குறிப்பு
- கிருஷ்ணகிரி மாவட்டமானது தெற்கில் தர்மபுரி மாவட்டமும், கிழக்கில் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களும், மேற்கு மற்றும் வடக்கில் கர்நாடக மற்றும் ஆந்திர மாநிலங்களும் எல்லைகளாக உள்ளன.
- இந்த மாவட்டத்தின் அட்சரேகை 110 12’ முதல் 120 49’ வரை வடக்கிலும் மற்றும் தீர்க்கரேகை 770 27’முதல் 780 38’ வரை கிழக்கிலும் அமைந்துள்ளது. இந்த மாவட்டமானது 5143 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது.
நில அமைப்பியல் மற்றும் வடிகால்:
- கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரி மற்றும் பெண்ணையாற்றை வடிநிலமாகக் கொண்டது.
- தென்மேற்கு எல்லையில் காவேரி ஆறு செல்கிறது. தொடஹல்லா ஒரு முக்கிய துணை நதியாக கரடு முரடாண பகுதிகளைக் கடந்து வடமேற்கில் செல்கிறது.
- இது காவேரியின் துணை ஆறு ஆகும். இதைத் தவிர பொன்னையாறு மாவட்டத்தில் ஓடும் பெரிய நதியாகும். இது நந்திமலை கர்நாடகாவில் தோன்றுகிறது.
- இதன் பெரும்பகுதி வடகிழக்கு நோக்கி செல்கிறது. பாம்பார் மற்றும் பர்கூர் ஆறு பொன்னி ஆற்றின் துணை நதியாகும்.
மழையளவு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஐந்தாண்டின் மழையளவு இந்திய வானியல் மையம், சென்னையின்படி கீழ்க்கண்டவாறு:
பெய்த மழையளவு மி.மீ. | இயல்பான மழை மி.மீ. | ||||
---|---|---|---|---|---|
2017 | 2018 | 2019 | 2020 | 2021 | |
1145.6 | 510.4 | 730.0 | 798.6 | 985.4 | 985 |
புவியமைப்பியல்:
பாறை வகை | புவி அமைப்புகள் | ||||
கடினப்பாறை | கரும்பாறை மற்றும் இலகு பாறை வண்டல் மண். |
நிலத்தடிநீர் அளவு:
இந்த மாவட்டத்தில் 44 மாதிரி கிணறுகள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் கண்காணிக்கப்படுகிறது. மழையளவானது பருவமழைக்கு முன்பும், பின்பும் நீர் அளவீடு செய்யப்படுகிறது. ஐந்தாண்டு மழையளவு கீழ்க்கண்டவாறு உள்ளது:
ஜன |
மே |
ஜன |
மே |
ஜன |
மே |
ஜன |
மே |
ஜன |
மே |
5 வருட பருவ |
5 வருட பருவ |
12.1 |
14.9 |
6.3 |
8.1 |
11.0 |
12.7 |
8.9 |
11 |
8.4 |
10.6 |
9.5 |
7.9 |
நீடித்த நிலைத்தன்மை:
நிலத்தடிநீர் நிலைப்பு தன்மையை உருவாக்கும் பொருட்டு மாநில மற்றும் மத்திய அரசு உதவியுடன் கீழ்க்கண்டவாறு நீர்செறிவூட்டும் கட்டமைப்குளை உருவாக்கியுள்ளது.
நீர்செறிவூட்டும் கட்டமைப்புகள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
தடுப்பணை | கசிவு நீர் குட்டை | செறிவூட்டு பள்ளங்கள் | செறிவூட்டு படுகை | மற்றவை | ஊரணி | பழுதான ஆழ்குழாய் செறிவூட்டல் | நீர் செறிவூட்டுக் குழாய்கள் | மேற்கூரை மழைநீர் சேகரிப்பு கட்டமைப்கள் | நீரழுத்த பாறை வெடிப்பு | மொத்தம் |
546 | 2 | 14 | 19 | 30 | 611 |
வருவாய் உள்வட்டம் மூலம் வகைப்படுத்தல்:
நீர்பயன்பாட்டின் அடிப்படையில் இம்மாவட்டத்தை மார்ச் 2020-ம் ஆண்டில் வருவாய் உள்வட்டம் மூலம் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது.
நீர்வெளிக் கொணருதல் / பயன்பாடு அடிப்படையில் (மார்ச் 2020-ன்படி) | வருவாய் உள்வட்டம் எண்ணிக்கை | வருவாய் உள்வட்டங்கள் |
---|---|---|
அதிநுகர்வு நிலை ( 100 % மேல்) | 12 | குருபாரபள்ளி, கல்லவி, மத்தூர், கேளிப்பள்ளி, நாகரசம்பட்டி, பேரிகை, சிங்காரம்பட்டி, ஊத்தக்கரை, வேப்பனஹள்ளி, அலப்பாதி, பர்கூர், சாம்பல்பட்டி. |
அபாயகரமான நிலை ( 90 % - 100 %) | 1 | இராயக்கோட்டை |
மித அபாயகரமான நிலை(70 % - 90%) | 7 | பகலூர், ஓசூர், கெலமங்கலம் கிருஷ்ணகிரி, பெரியமுத்தூர், மத்திகிரி கோச்சம்பள்ளி |
பாதுகாப்பான நிலை (70 % உட்பட்ட) | 9 | ஆண்டிவனப்பள்ளி, அஞ்சட்டி, தேன்கனிக்கோட், சூளகிரி, உத்தனபள்ளி, காவேரிபட்டினம், தளி, காக்கடசம், பரூர். |
உவர் ஒன்றியங்கள் | - | |
மொத்தம் | 29 |