Section: State-district-profile pages are not under access control

திருப்பூர் மாவட்ட விவரக் குறிப்பு

  • திருப்பூர் மாவட்டமானது கிழக்கில் கரூர் மாவட்டத்தையும், மேற்கில் கோயம்புத்தூர் மாவட்டத்தையும், வடக்கில் ஈரோடு மாவட்டத்தையும், தெற்கில் திண்டுக்கல் மாவட்டத்தையும் எல்லையாகக் கொண்டுள்ளது.
  • இந்த மாவட்டத்தின் அட்சரேகை 100 14’ 00’’ முதல் 110 20’ 00’’ வரை வடக்கிலும் மற்றும் தீர்க்கரேகை 770 27’ 00’’ முதல் 770 56’ 00’’ வரை கிழக்கிலும் அமைந்துள்ளது. இந்த மாவட்டமானது 2296 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது.

நில அமைப்பியல் மற்றும் வடிகால்:

  • திருப்பூர் மாவட்டத்தின் தென்பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலை அமைந்துள்ளது. (ஆனைமலை, சிறுமுகை மலை, நீலகிரி, பொழுவம்பட்டி, ஜனக்கல் (வெள்ளிகிரி) மாவட்டத்தின் மற்ற பகுதிகள் மேடு பள்ளமாகவும், சில பகுதிகள் சமதளமாகவும் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
  • இந்த மாவட்டத்தின் முக்கிய நதிகளான நொய்யல், அமராவதி, காவிரி ஆற்றின் துணை நதிகளாகும்.
  • சின்னாறு மற்றும் தென்னாறு, அமராவதி ஆற்றின் துணை நதிகளாகும். இவ்வாறானது, மாவட்ட விவசாயத்திற்கு பயன்படுகிறது.
  • நல்லார் மற்றும் பாலாறு பரம்பிக்குளம் ஆழியாற்றின் வடிநிலப்பகுதியாகும்.
  • இம்மாவட்டத்தில் அமராவதி அணை மற்றும் திருமூர்த்தி அணை விவசாயத்தின் முக்கிய அணைகளாகும். உப்பார் அணை மழைக்காலங்களில் தண்ணீரை தேக்கி வைக்க ஏதுவாகும்.

மழையளவு:

திருப்பூர் மாவட்டத்தின் ஐந்தாண்டின் மழையளவு இந்திய வானியல் மையம், சென்னையின்படி கீழ்க்கண்டவாறு:

பெய்த மழையளவு மி.மீ. இயல்பான மழை மி.மீ.
2017 2018 2019 2020 2021
679.8 716.2 488.1 748.8 845.1 606.8

புவியமைப்பியல்:

பாறை வகை புவி அமைப்புகள்
கடினப்பாறை நைஸ், சார்னகைட், கிரானைட், குவார்ட்சைட், லேடிரைட் மற்றும் ஆற்று வண்டல்

நிலத்தடிநீர் அளவு:

இந்த மாவட்டத்தில் 38மாதிரி கிணறுகள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் கண்காணிக்கப்படுகிறது. மழையளவானது பருவமழைக்கு முன்பும், பின்பும் நீர் அளவீடு செய்யப்படுகிறது. ஐந்தாண்டு மழையளவு கீழ்க்கண்டவாறு உள்ளது:

ஜன
2017

மே
2017

ஜன
2018

மே
2018

ஜன
2019

மே
2019

ஜன
2020

மே
2020

ஜன
2021

மே
2021

5 வருட பருவ
மழைக்கு முன்

5 வருட பருவ
மழைக்கு பின்

16.3

26.4

12.4

9.8

7.6

10.9

8.4

12.3

7.1

10.6

11.9

8.8

நீடித்த நிலைத்தன்மை:

நிலத்தடிநீர் நிலைப்பு தன்மையை உருவாக்கும் பொருட்டு மாநில மற்றும் மத்திய அரசு உதவியுடன் கீழ்க்கண்டவாறு நீர்செறிவூட்டும் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.

வருவாய் உள்வட்டம் மூலம் வகைப்படுத்தல்:

நீர் பயன்பாட்டின் அடிப்படையில் இம்மாவட்டத்தை மார்ச் 2020-ம் ஆண்டில் வருவாய் உள்வட்டம் மூலம் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது.


நீர்வெளிக் கொணருதல் / பயன்பாடு அடிப்படையில் (மார்ச் 2020-ன்படி) வருவாய் உள்வட்டம் எண்ணிக்கை வருவாய் உள்வட்டங்கள்
அதிநுகர்வு நிலை ( 100 % மேல்) 23 அவினாசி (கிழக்கு), ஊத்துக்குளி, அவினாசி (மேற்கு), குடிமங்கலம், காங்கேயம், குந்தடம், முலனூர், குன்னத்தூர், திருப்பூர் (தெற்கு),
அவிநாசிப்பாளையம் (s), செய்யூர், கன்னிவாடி, பல்லடம், பெரியவாலவாடி, பெருமநல்லூர், பேத்தப்பம்பட்டி, வேலம்பாளையம் பொங்கலூர்,
பொன்னபுரம், சமலபுரம், உத்தியூர், கரடிவாவி வெள்ளக்கோவில்,
அபாயகரமான நிலை ( 90 % - 100 %) 4 ஆலங்காயம், திருப்பூர் (வடக்கு), நத்தகடையூர் சங்கராந்தம்பாளையம்
மித அபாயகரமான நிலை (70 % - 90%) 5 உடுமலைப்பேட்டை, தாராபுரம், நல்லூர்குறிச்சிக்கோட்டை, துங்கவி
பாதுகாப்பான நிலை (70 % உட்பட்ட) 1 மடத்துக்குளம்
Total 33