Section: State-district-profile pages are not under access control

விழுப்புரம் மாவட்ட விவரக் குறிப்பு

  • விழுப்புரம் மாவட்டத்தின் கிழக்கில் வங்காள விரிகுடாவும், யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரியும் எல்லையாக உள்ளது. வடக்கில் காஞ்சிபுரம், மற்றும் திருவண்ணாமலை மாவட்டமும் எல்லையாக உள்ளது. தெற்கில் கடலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டமும் மற்றும் மேற்கில் சேலம் மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளது.
  • இந்த மாவட்டத்தின் அட்சரேகை 110 30’ 00’’ முதல் 120 35’ 00’’ வரை வடக்கிலும் மற்றும் தீர்க்கரேகை 780 37’ 00’’முதல் 800 00’ 00’’ வரை கிழக்கிலும் அமைந்துள்ளது. இந்த மாவட்டமானது 7190 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது.

நில அமைப்பியல் மற்றும் வடிகால்:

  • விழுப்புரம் மாவட்டம் மலைப்பகுதி, சமதளப்பகுதி, கடற்கரை பகுதி ஆகியவை இணைந்த மாவட்டமாக உள்ளது.
  • இம்மாவட்டத்தின் மேற்கு பகுதி கல்வராயன் மலை, செஞ்சிமலை மற்றும் கல்லக்குறிச்சி, செஞ்சி முறையே அமைந்துள்ளது.
  • மத்திய பகுதி சமதளமாக உள்ளது. கிழக்கு பகுதி கடற்கரை சம்பந்தமாகவும், மரக்காணம் மற்றும் வானூர் பகுதியில் அமைந்துள்ளது.
  • இம்மாவட்டத்தில் தொண்டியாறு, பென்னையாறு, வெள்ளாறு ஆகியவை ஓடுகின்றன.

மழையளவு:

விழுப்புரம் மாவட்டத்தின் ஐந்தாண்டின் மழையளவு இந்திய வானியல் மையம், சென்னையின்படி கீழ்க்கண்டவாறு:

பெய்த மழையளவு மி.மீ. இயல்பான மழை மி.மீ.
2017 2018 2019 2020 2021
1066.9 727.5 906.3 1137.7 1935.2 985

புவியமைப்பியல்:

பாறை வகை புவி அமைப்புகள்
கடினப்பாறை (60 %) இலகு பாறை, கூழாங்கல் (வெ), வண்டல் மண்
படிவுப்பாறை (40 %) சுண்ணாம்பு கல், மணல் கலந்த களி, வெள்ளக்களிமண், பழுப்புக்கரி (lignite)

நிலத்தடிநீர் அளவு:

இந்த மாவட்டத்தில் 89 மாதிரி கிணறுகள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் கண்காணிக்கப்படுகிறது. மழையளவானது பருவமழைக்கு முன்பும், பின்பும் நீர் அளவீடு செய்யப்படுகிறது. ஐந்தாண்டு மழையளவு கீழ்க்கண்டவாறு உள்ளது:

ஜன
2017

மே
2017

ஜன
2018

மே
2018

ஜன
2019

மே
2019

ஜன
2020

மே
2020

ஜன
2021

மே
2021

5 வருட பருவ
மழைக்கு முன்

5 வருட பருவ
மழைக்கு பின்

12.8

15.0

7.7

18.3

7.8

12.1

7.3

22.6

4.0

8.3

7.2 15.1

நீடித்த நிலைத்தன்மை:

நிலத்தடிநீர் நிலைப்பு தன்மை உருவாக்கும் பொருட்டு மாநில மற்றும் மத்திய அரசு உதவியுடன் கீழ்க்கண்டவாறு நீர்செறிவூட்டும் கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளது.

வருவாய் உள்வட்டம் மூலம் வகைப்படுத்தல்:

நீர் பயன்பாட்டின் அடிப்படையில் இம்மாவட்டத்தினை மார்ச் 2020-ம் ஆண்டில் வருவாய் உள்வட்டம் மூலம் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது.

நீர்வெளிக் கொணருதல் / பயன்பாடு அடிப்படையில் (மார்ச் 2020-ன்படி) வருவாய் உள்வட்டம் எண்ணிக்கை வருவாய் உள்வட்டங்கள்
அதிநுகர்வு நிலை ( 100 % மேல்) 19 அன்னியூர், அரசூர் (வி), அவலூர் பேட்டை, பிரம்மதேசம், சித்தலிங்கமடம், கஞ்சனூர், செஞ்சி, மேல்மலையனூர்,
மேலஒலக்கூர்,சாத்தம்பட்டி, நெமிலி, ஒலக்கூர் சத்தியமங்கலம், சிறுவாடி, சித்தலம்பட்டு, திருவண்ணைநல்லூர், , உப்புவேலூர், வடசிறுவள்ளூர், வல்லம் (வ),
அபாயகரமான நிலை ( 90 % - 100 %) 4 கண்டமங்கலம், விக்கிரவாண்டி, கிழியனுர்,வளவனுர் .
மித அபாயகரமான நிலை (70 % - 90%) 6 காணை, முகையூர், மரக்காணம், திண்டிவனம், விழுப்புரம், அவனிப்பூர்
பாதுகாப்பான நிலை (70 % உட்பட்ட) 5 தேவனூர், ரெட்டணை, வானூர்., மைலம், அரக்கண்டநல்லூர்
உவர் ஒன்றியங்கள் -  
மொத்தம் 34