Section: State-district-profile pages are not under access control

சேலம் மாவட்ட விவரக் குறிப்பு

  • சேலம் மாவட்டத்தின் கிழக்கில் விழுப்புரம் மாவட்டமும், மேற்கில் ஈரோடு மாவட்டமும், வடக்கில் தருமபுரி மாவட்டமும், தெற்கில் நாமக்கல் மாவட்டமும் எல்லையாக உள்ளன.
  • அட்சரேகை 110 21’ 30” முதல் 110 59’ 00’’ வரை வடக்கிலும் மற்றும் தீர்க்கரேகை 770 38’ 00’’முதல் 780 50’ 00’’ வரை கிழக்கிலும் அமைந்துள்ளது. இந்த மாவட்டமானது 5245 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது.

நில அமைப்பியல் மற்றும் வடிகால்:

  • சேலம் மாவட்டம் மலைப்பாங்கான சமதளமற்ற பகுதியாக விளங்குகிறது. கிழக்கு தொடர்ச்சி மலையின் அதிகப்படியான அளவு இம்மாவட்டத்தில் உள்ளது.
  • சேர்வுராயன்மலை, ஏற்காடு ஆகியவை கிழக்கு மலைத் தொடரில் 1900 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
  • இம்மாவட்டத்தில் சமதளமும், மலைப்பகுதியும் கிட்டதட்ட 150 மீட்டர் முதல் 400 மீட்டர் வரை கடல்மட்டத்தின் மேலே உள்ளது.
  • இம்மாவட்டத்தின் மேற்கு பகுதி தாழ்வான பகுதியாக விளங்குகிறது.
  • பெரிய உபநதியான சாரபங்கா, திருமணிமுத்தாறு, வசிஸ்டநதி மற்றும் வெள்ளாறு மாவட்டத்தின் கிழக்கு நோக்கி ஓடுகின்றது.

மழையளவு:

சேலம் மாவட்டத்தின் ஐந்தாண்டின் மழையளவு இந்திய வானியல் மையம், சென்னையின்படி கீழ்க்கண்டவாறு:

பெய்த மழையளவு மி.மீ. இயல்பான மழை மி.மீ.
2017 2018 2019 2020 2021
1006.5 712.7 927.5 967.9 1167.6 954.8

புவியமைப்பியல்:

பாறை வகை புவி அமைப்புகள்
கடினப்பாறை இலகு பாறை, கூழாங்கல் (வெ), வண்டல் மண்.

நிலத்தடிநீர் அளவு:

இந்த மாவட்டத்தில் 41 மாதிரி கிணறுகள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் கண்காணிக்கப்படுகிறது. மழையளவானது பருவமழைக்கு முன்பும், பின்பும் நீர் அளவீடு செய்யப்படுகிறது. ஐந்தாண்டு மழையளவு கீழ்க்கண்டவாறு உள்ளது:

ஜன
2017

மே
2017

ஜன
2018

மே
2018

ஜன
2019

மே
2019

ஜன
2020

மே
2020

ஜன
2021

மே
2021

5 வருட பருவ
மழைக்கு முன்

5 வருட பருவ
மழைக்கு பின்

14.5

15.2

9.9

13.0

11.2

15.1

9.0

12

6.8

8.0 11.2 8.9

நீடித்த நிலைத்தன்மை:

நிலத்தடிநீர் நிலைப்பு தன்மையை உருவாக்கும் பொருட்டு மாநில மற்றும் மத்திய அரசு உதவியுடன் கீழ்க்கண்டவாறு நீர்செறிவூட்டு கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளது.

வருவாய் உள்வட்டம் மூலம் வகைப்படுத்தல்:

நீர்பயன்பாட்டின் அடிப்படையில் இம்மாவட்டத்தை மார்ச் 2020-ம் ஆண்டில் வருவாய் உள்வட்டம் மூலம் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது.

நீர்வெளிக் கொணருதல் / பயன்பாடு அடிப்படையில் (மார்ச் 2020-ன்படி) வருவாய் உள்வட்டம் எண்ணிக்கை வருவாய் உள்வட்டங்கள்
அதிநுகர்வு நிலை ( 100 % மேல்) 34 அழகாபுரம்,ஆத்தூர், பேளூர், எர்ணாபுரம், காரைப்பட்டி, காட்டுகொட்டாய், மல்லியகரை, பழமலை, சேலம் டவுன்,
சங்ககிரி, (கி) மற்றும் (மே), தாரமங்கலம், மேச்சேரி, சம்மந்தபட்டி, திருமலகிரி, வலசையூர், வேம்படித்தளம், ஏத்தாப்பூர், கெங்கவல்லி,
தலைவாசல், வாழப்பாடி, வீரபாண்டி, கொங்கனாபுரம், நங்கவள்ளி, ஓமலூர், பி.என்.பாளையம், மேட்டூர்,
எடப்பாடி, காடையாம்பட்டி, பூலம்பட்டி, பொட்டனேரி, சூரமங்கலம், வீரகனூர் மேச்சேரி,கொண்டலாம்பட்டி
அபாயகரமான நிலை ( 90 % - 100 %) 2 கருப்பூர், பணமரத்துப்பட்டி
மித அபாயகரமான நிலை (70 % - 90%) 2 குளத்தூர், பச்சமலை
பாதுகாப்பான நிலை (70 % உட்பட்ட) 6 அறுனூத்தமலை, கல்வராயன்மலை, புதூர் (தெ), வெள்ளக்கடை, ஏற்காடு, தேவூர்
உவர் ஒன்றியங்கள் -  
மொத்தம் 44