Section: State-district-profile pages are not under access control

ஈரோடு மாவட்ட விவரக் குறிப்பு

  • ஈரோடு மாவட்டத்தின் வடகிழக்கு எல்லையாக தருமபுரி மற்றும் சேலம் மாவட்டம் உள்ளது. இம்மாவட்டத்தின் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் கர்நாடக மாநிலம் எல்லையாக உள்ளன. நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம் தென் கிழக்கு பகுதியின் எல்லையாகவும், திண்டுக்கல் மாவட்டம் தெற்கு எல்iயைhகவும் நாமக்கல் மற்றும் கல8ர் கிழக்கு எல்லையாக உள்ளது.
  • இந்த மாவட்டத்தின் அட்சரேகை 100 35’ 00’’ முதல் 110 58’ 00’’ வரை வடக்கிலும் மற்றும் தீர்க்கரேகை 760 05’ 00’’முதல் 770 57’ 00’’ வரை கிழக்கிலும் அமைந்துள்ளது. இந்த மாவட்டமானது 5714 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது.

நில அமைப்பியல் மற்றும் வடிகால்:

  • ஈரோடு மாவட்டம் மாறுபட்ட நிலப்பரப்பை கொண்டது. வடகிழக்கிலிருந்து தென் மேற்கு வரை மிதமான சாய்வு நிலமாக உள்ளது.
  • இம்மாவட்டத்தின் வடமேற்கு பகுதி தாளவாடி, சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், பவாணி சாகர், பவாணி, அந்தியூர், அம்மாபேட்டை ஆகிய ஒன்றியங்கள் கிழக்கு தொடர்ச்சி மலையினுடைய தென் பகுதியில் பக்கவாட்டில் அமைந்துள்ளது.
  • இது காவேரியை வடிநிலமாகக் கொண்டது. இதன் துணை நதிகளான பவாணி, நொய்யல், உப்பாறு, வாட்டமலைக்கரை, அமராவதி, சண்முகாநதி, நல்லத்தங்காள் ஓடை ஆகியவை காவேரியில் கலக்கின்றன.

மழையளவு:

ஈரோடு மாவட்டத்தின் ஐந்தாண்டின் மழையளவு இந்திய வானியல் மையம், சென்னையின்படி கீழ்க்கண்டவாறு:

பெய்த மழையளவு மி.மீ. இயல்பான மழை மி.மீ.
2017 2018 2019 2020 2021
776.7 772.7 664.2 629.5 1010.1 721.4

புவியமைப்பியல்:

பாறை வகை புவி அமைப்புகள்
கடினப்பாறை இலகு பாறை, கூழாங்கல், கரும்பாறை, வண்டல்மண்

நிலத்தடிநீர் அளவு:

இந்த மாவட்டத்தில் 42 மாதிரி கிணறுகள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் கண்காணிக்கப்படுகிறது. மழையளவானது பருவமழைக்கு முன்பும், பின்பும் நீர் அளவீடு செய்யப்படுகிறது. ஐந்தாண்டு மழையளவு கீழ்க்கண்டவாறு உள்ளது:

ஜன
2017

மே
2017

ஜன
2018

மே
2018

ஜன
2019

மே
2019

ஜன
2020

மே
2020

ஜன
2021

மே
2021

5 வருட பருவ
மழைக்கு முன்

5 வருட பருவ
மழைக்கு பின்

21.7

28.9

12.9

24.2

11.6

14.6

9.1

14

10.5

13.1

16.0 10.7

நீடித்த நிலைத்தன்மை:

நிலத்தடிநீர் நிலைப்பு தன்மை உருவாக்கும் பொருட்டு மாநில மற்றும் மத்திய அரசு உதவியுடன் கீழ்க்கண்டவாறு நீர்செறிவூட்டும் கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளது.

வருவாய் உள்வட்டம் மூலம் வகைப்படுத்தல்:

நீர் பயன்பாட்டின் அடிப்படையில் இம்மாவட்டத்தினை மார்ச் 2020-ம் ஆண்டில் வருவாய் உள்வட்டம் மூலம் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது.

நீர்வெளிக் கொணருதல் / பயன்பாடு அடிப்படையில் (மார்ச் 2020-ன்படி) வருவாய் உள்வட்டம் எண்ணிக்கை வருவாய் உள்வட்டங்கள்
அதிநுகர்வு நிலை ( 100 % மேல்) 20 பவாணிசாகர், சென்னிமலை, கொடுமுடி, மொடகுறிச்சி, நம்பியூர், பெருந்துரை, ஆதியூர், அரச்சலூர் அரசூர் அதானி, காசிபாளையம்,
,கிளம்படி,எலத்தூர், ஈரோடு (கி) மற்றும் ஈரோடு (வ),( ஈரோடு (மே)), புஞ்சைபுளியம்பட்டி, வெள்ளோடு. திங்களூர், சத்தியமங்கலம்.
அபாயகரமான நிலை ( 90 % - 100 %) 1 அம்மாபேட்டை
மித அபாயகரமான நிலை (70 % - 90%) 10 பவாணி,கஞ்சிகொள்ளை, வாணிபுத்தூர் , கவுண்டபாடி, பூந்துரை,
குறிச்சி, சிவகிரி குதியலத்தூர், சிறுவலூர், தாளவாடி,
பாதுகாப்பான நிலை (70 % உட்பட்ட) 3 கோபிசெட்டிபாளையம், பர்கூர், கூகளூர்
உவர் ஒன்றியங்கள் -  
மொத்தம் 34