Section: State-district-profile pages are not under access control

கன்னியாகுமரி மாவட்ட விவரக் குறிப்பு

  • இம்மாவட்டத்தின் மொத்த மக்கட் தொகை 18,70,374 ஆகும். இவற்றில் 15,39,802 நகரகப் பகுதிகளிலும் 3,30,572 ஊரகப் பகுதிகளிலும் வசிக்கின்றனர்.
  • கன்னியாகுமரி மாவட்டமானது தமிழ்நாட்டின் தென்பகுதியில் உள்ளது. இம்மாவட்டத்தின் எல்லைகளாக வடக்கு மற்றும் கிழக்கில் திருநெல்வேலி மாவட்டம் உள்ளது. தென்கிழக்கின் பக்கவாட்டில் மன்னார்வளைகுடா மற்றும் தெற்கு மற்றும் தென்மேற்கில் இந்திய பெருங்கடலும் மற்றும் அரபிக்கடல் உள்ளது. மேற்கு மற்றும் வடமேற்கில் கேரள மாநிலம் எல்லைகளாக அமைந்துள்ளது.
  • இந்த மாவட்டத்தின் அட்சரேகை 80 03’ முதல் 80 35’ வரை வடக்கிலும் மற்றும் தீர்க்கரேகை 770 15’ முதல் 770 36’ வரை கிழக்கிலும் அமைந்துள்ளது. இந்த மாவட்டமானது 1684 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது.

நில அமைப்பியல் மற்றும் வடிகால்:

  • கன்னியாகுமரி மாவட்டத்தில் குழித்துறையாறு என்று அழைக்கப்படுகின்ற தாமிரபரணி ஆறு பெரிய ஆறாக விளங்குகிறது. 2 துணை நதிகளான கொடையாறு, பரளியாறு ஆகியவை இம்மாவட்டத்தில் ஓடுகின்றன.
  • சித்தாறு 1 மற்றும் 2 ஆகியவை கொடையாற்றின் துணை நதிகளாகும்.
  • தாமிரபரணி நதியானது மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகி அரபிக்கடலில் தென்கைப்பட்டினம் என்ற இடத்தில் கலக்கின்றது. இது கன்னியாகுமரியிலிருந்து 56 கி.மீ. தூரத்தில் உள்ளது. வள்ளியாறு, தூவளாறு ஆகியவை வெள்ளி மலையில் உருவாகிறது.
  • இது அரபிக்கடலில் மணவாளன் குறிச்சி என்ற இடத்தில் கலக்கிறது. பழையாறு ஒரு சிறு நதியாகவும் இம்மாவட்டத்தில் ஓடுகிறது.

மழையளவு:

கன்னியாகுமரி மாவட்டத்தின் ஐந்தாண்டின் மழையளவு இந்திய வானியல் மையம், சென்னையின்படி கீழ்க்கண்டவாறு:

பெய்த மழையளவு மி.மீ. இயல்பான மழை மி.மீ.
2017 2018 2019 2020 2021
1165.1 1289.3 1268.0 1099.5 2241.0 985

புவியமைப்பியல்:

பாறை வகை புவி அமைப்புகள்
கடினப்பாறை 80 % கரும்பாறை
படிவுப்பாறை 20 % மணற்பாறை, ஆற்று வண்டல், கருப்புகளி மற்றும் கடல் மணல் படிவம்

நிலத்தடிநீர் அளவு:

இந்த மாவட்டத்தில் 16 மாதிரி கிணறுகள் (த.கு.வ. வாரியம்) தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் கண்காணிக்கப்படுகிறது. மழையளவானது பருவமழைக்கு முன்பும், பின்பும் நீர் அளவீடு செய்யப்படுகிறது. ஐந்தாண்டு மழையளவு கீழ்க்கண்டவாறு உள்ளது:

ஜன
2017

மே
2017

ஜன
2018

மே
2018

ஜன
2019

மே
2019

ஜன
2020

மே
2020

ஜன
2021

மே
2021

5 வருட பருவ
மழைக்கு முன்

5 வருட பருவ
மழைக்கு பின்

7.3

13.0

5.6

7.1

5.7

6.3

4.8

5.6

4.8

4.1

6.3 4.7

நீடித்த நிலைத்தன்மை:

நிலத்தடிநீர் நிலைப்பு தன்மையை உருவாக்கும் பொருட்டு மாநில மற்றும் மத்திய அரசு உதவியுடன் கீழ்க்கண்டவாறு நீர்செறிவூட்டும் கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளது.

வருவாய் உள்வட்டம் மூலம் வகைப்படுத்தல்:

நீர்பயன்பாட்டின் அடிப்படையில் இம்மாவட்டத்தை மார்ச் 2020-ம் ஆண்டில் வருவாய் உள்வட்டம் மூலம் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது.

நீர்வெளிக் கொணருதல் / பயன்பாடு அடிப்படையில் (மார்ச் 2020-ன்படி) வருவாய் உள்வட்டம் எண்ணிக்கை வருவாய் உள்வட்டங்கள்
அதிநுகர்வு நிலை ( 100 % மேல் 0  
அபாயகரமான நிலை ( 90 % - 100 %) 0  
மித அபாயகரமான நிலை (70 % - 90%) 1 இராஜாக்காமங்கலம்
பாதுகாப்பான நிலை (70 % உட்பட்ட) 17 அருமணை, அழகியபாண்டியபுரம், பூதப்பாண்டி, தக்களை, கொலச்சல்,
இடைக்கோடு, மிடாலம், குலசேகரம், குறுத்தன்கோடு, கன்னியாகுமரி, நாகர்கோவில்,
பனிக்குளம், சுசீந்தரம், திருவட்டாறு, தோவளை, திருவிதான்கோடு, விளவன்கோடு.
உவர் ஒன்றியங்கள் -  
மொத்தம் 18  
Top