Section: State-district-profile pages are not under access control

திருநெல்வேலி மாவட்ட விவரக் குறிப்பு

  • திருநெல்வேலி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 30,77,233 ஆகும். இதில் ஊரகப் பகுதியின் மக்கள் தொகை 15,20,229 , நகரகப் பகுதியின் மக்கள் தொகை 15,57,004 ஆகும்.
  • திருநெல்வேலி மாவட்டத்தின் வடக்கில் விருதுநகர் மாவட்டமும், கிழக்கில் தூத்துக்குடி மாவட்டமும், தெற்கில் மன்னார் வளைகுடாவும், மேற்கில் கேரள மாநிலமும், தென்மேற்கில் கன்னியாகுமரி மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளது.
  • இந்த மாவட்டத்தின் அட்சரேகை 080 08’ 09’’ முதல் 090 24’ 30’’ வரை வடக்கிலும் மற்றும் தீர்க்கரேகை 770 08’ 30’’முதல் 770 58’ 30’’ வரை கிழக்கிலும் அமைந்துள்ளது. இந்த மாவட்டமானது 6810 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது.

நில அமைப்பியல் மற்றும் வடிகால்:

  • திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆறு முக்கிய நதியாக விளங்குகிறது. தாமிரபரணி ஆற்றை வடிநிலமாக கொண்டுள்ளது.
  • இவ்வாற்றின் உபநதிகளான பேயார், உள்ளார், காரைலயாறு, செருவார், பாம்பார், மணிமுத்தாறு, வராகநதி, ராமநதி, ஜம்புநதி, கடனாநதி, கல்லார், கருணை ஆறு, பச்சையார், சித்தார், குண்டார், ஐந்தருவி ஆறு, ஹனுமனநதி, கருப்பு நதி, ஆளுத்தகன்னியார் ஆகிய நதிகள் ஓடுகின்றன.
  • தாமிரபரணி ஆறு மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகி தூத்துக்குடி மாவட்டத்தில் நுழைகிறது.
  • நம்பியார் மற்றும் ஹனுமநதி ஆகியவை நாங்குநேரி வட்டத்தின் தென்பகுதியில் ஓடுகிறது. வடக்கு பகுதியில் சிறுபகுதி வைப்பார் வடிநிலமாக உள்ளது.

மழையளவு:

திருநெல்வேலி மாவட்டத்தின் ஐந்தாண்டின் மழையளவு இந்திய வானியல் மையம், சென்னையின்படி கீழ்க்கண்டவாறு:

பெய்த மழையளவு மி.மீ. இயல்பான மழை மி.மீ.
2017 2018 2019 2020 2021
1127.0 1137.8 1057.7 790.2 1569.3 985

புவியமைப்பியல்:

இலகு பாறை, கூழாங்கல் (வெ), வண்டல் மண், சுண்ணாம்பு மண்
பாறை வகை புவி அமைப்புகள்
கடினப்பாறை (90 %)
படிவுப்பாறை (10 %) சுண்ணாம்பு கல், மணல் கலந்த களி

நிலத்தடிநீர் அளவு:

இந்த மாவட்டத்தில் 63 மாதிரி கிணறுகள் (த.கு.வ. வாரியம்) தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் கண்காணிக்கப்படுகிறது. மழையளவானது பருவமழைக்கு முன்பும், பின்பும் நீர் அளவீடு செய்யப்படுகிறது. ஐந்தாண்டு மழையளவு கீழ்க்கண்டவாறு உள்ளது:

ஜன
2017

மே
2017

ஜன
2018

மே
2018

ஜன
2019

மே
2019

ஜன
2020

மே
2020

ஜன
2021

மே
2021

5 வருட பருவ
மழைக்கு முன்

5 வருட பருவ
மழைக்கு பின்

11.5

23.9

6.3

7.0

5.5

9.8

3.5

18.2

7.8

11.5

12.8 5.1

நீடித்த நிலைத்தன்மை:

நிலத்தடிநீர் நிலைப்பு தன்மை உருவாக்கும் பொருட்டு மாநில மற்றும் மத்திய அரசு உதவியுடன் கீழ்க்கண்டவாறு நீர்செறிவூட்டும் கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளது.

வருவாய் உள்வட்டம் மூலம் வகைப்படுத்தல்:

நீர் பயன்பாட்டின் அடிப்படையில் இம்மாவட்டத்தினை மார்ச் 2020-ம் ஆண்டில் வருவாய் உள்வட்டம் மூலம் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது.

நீர்வெளிக் கொணருதல் / பயன்பாடு அடிப்படையில் (மார்ச் 2020-ன்படி) வருவாய் உள்வட்டம் எண்ணிக்கை வருவாய் உள்வட்டங்கள்
அதிநுகர்வு நிலை ( 100 % மேல்) 2 வன்னிகொன்னேந்தல், பலவுர்
அபாயகரமான நிலை ( 90 % - 100 %) 1 இராதாபுரம்
மித அபாயகரமான நிலை (70 % - 90%) 6 மூலக்கரைபட்டி, மானூர், லிவிஞ்சிபுரம், சிவந்திபாதி, தாழையூத்து, விஜயநாராயணபுரம்
பாதுகாப்பான நிலை (70 % உட்பட்ட) 20 பணகுடி, அம்பாசமுத்திரம், திசையன்விளை சேரமாதேவி, ஏர்வாடி, கங்கைகொண்டான், வல்லியூர், கலக்காடு, மாதவகுறிச்சி, மேல்பட்டினம்,
மேலவசவல், முக்கூடல், முனீர்பல்லம், பாளையங்கோட்டை, நாங்கனேரி, நாரணம்மாள்புரம், பூலம், சமூகரெங்கபுரம், சிங்கம்பட்டி, திருநெல்வேலி
உவர் ஒன்றியங்கள் -  
மொத்தம் 29