தருமபுரி மாவட்ட விவரக் குறிப்பு
- தருமபுரி மாவட்டத்தின் வடக்கில் கிருஷ்ணகிரி மாவட்டமும், கிழக்கில் திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டமும் எல்லையாக உள்ளன. சேலம் மாவட்டம் தென் பகுதியிலும், காவிரி ஆறு மேற்கு பகுதியிலும் எல்லைகளாக உள்ளன.
- இந்த மாவட்டத்தின் அட்சரேகை 110 47’ 40’’ முதல் 120 33’ 40’’ வரை வடக்கிலும் மற்றும் தீர்க்கரேகை 770 33’ 30’’முதல் 780 40’ 00’’ வரை கிழக்கிலும் அமைந்துள்ளது. இந்த மாவட்டமானது 4498 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது.
நில அமைப்பியல் மற்றும் வடிகால்:
- தருமபுரி மாவட்டத்தில் காவிரி, மற்றும் பெண்ணையாறு நதிகள் ஓடுகின்றன. காவிரி ஆறு கர்நாடக மாநிலத்தில் தோன்றி ஒகேனக்கல் என்ற இடத்தில் உள்நுழைகிறது. அதன்வழியாக சேலம் மாவட்டத்தின் மேட்டூர் அணையை சென்றடைகிறது.
- இந்த மாவட்டத்தில் பெண்ணையாறு ஓடுகிறது. இது நந்திமலை, கர்நாடகாவில் தோன்றுகிறது. பாகளூர் மேற்கு பகுதியில் தமிழ்நாட்டில் நுழைகின்றது. இது பெரும்பாலும் தென்கிழக்கு நோக்கி தொட்டம்பட்டியில் பாய்ந்து பின் கிழக்கு நோக்கி செல்கிறது.
- பாம்பாறு, வாணியாறு, மற்றும் கல்லாறு ஆகியவை பொன்னை ஆற்றின் துணை நதிகளாகும். மேலும், சின்னாறு, மார்க்கண்டேய நதி ஆகியவை வடக்கு நோக்கி செல்கிறது.
மழையளவு:
தருமபுரி மாவட்டத்தின் ஐந்தாண்டின் மழையளவு இந்திய வானியல் மையம், சென்னையின்படி கீழ்க்கண்டவாறு:
பெய்த மழையளவு மி.மீ. | இயல்பான மழை மி.மீ. | ||||
---|---|---|---|---|---|
2017 | 2018 | 2019 | 2020 | 2021 | |
906.5 | 468.0 | 838.1 | 918.4 | 1027.8 | 985 |
புவியமைப்பியல்:
பாறை வகை | புவி அமைப்புகள் |
கடினப்பாறை | இலகு பாறை, கூழாங்கல், கரும்பாறை |
நிலத்தடிநீர் அளவு:
இந்த மாவட்டத்தில் 37 மாதிரி கிணறுகள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் கண்காணிக்கப்படுகிறது. மழையளவானது பருவமழைக்கு முன்பும், பின்பும் நீர் அளவீடு செய்யப்படுகிறது. ஐந்தாண்டு மழையளவு கீழ்க்கண்டவாறு உள்ளது.:
ஜன |
மே |
ஜன |
மே |
ஜன |
மே |
ஜன |
மே |
ஜன |
மே |
5 வருட பருவ |
5 வருட பருவ |
14.9 |
17.7 |
10.8 |
13.0 |
15.8 |
15.2 |
9.8 |
14.4 |
8.9 |
11.5 |
12.4 | 10.2 |
நீடித்த நிலைத்தன்மை:
நிலத்தடிநீர் நிலைப்பு தன்மை உருவாக்கும் பொருட்டு மாநில மற்றும் மத்திய அரசு உதவியுடன் கீழ்க்கண்டவாறு நீர்செறிவூட்டும் கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளது.
நீர்செறிவூட்டும் கட்டமைப்புகள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
தடுப்பணை | கசிவு நீர் குட்டை | செறிவூட்டு பள்ளங்கள் | செறிவூட்டு படுகை | மற்றவை | ஊரணி | பழுதான ஆழ்குழாய் செறிவூட்டல் | நீர் செறிவூட்டுக் குழாய்கள் | மேற்கூரை மழைநீர் சேகரிப்பு கட்டமைப்கள் | நீரழுத்த பாறை வெடிப்பு | மொத்தம் |
356 | 3 | 6 | 3 | 25 | 393 |
வருவாய் உள்வட்டம் மூலம் வகைப்படுத்தல்:
நீர் பயன்பாட்டின் அடிப்படையில் இம்மாவட்டத்தினை மார்ச் 2020-ம் ஆண்டில் வருவாய் உள்வட்டம் மூலம் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது.
நீர்வெளிக் கொணருதல் / பயன்பாடு அடிப்படையில் (மார்ச் 2020-ன்படி) | வருவாய் உள்வட்டம் எண்ணிக்கை | வருவாய் உள்வட்டங்கள் |
---|---|---|
அதிநுகர்வு நிலை ( 100 % மேல்) | 14 | பொம்மிடி, இந்தூர், கடத்தூர், கம்பியநல்லூர், மாரந்தஹள்ளி, பாளையம், பாப்பாரப்பட்டி, பெண்ணகரம், பெரும்பாளை, புலிக்கரை, தென்கரைகோட்டை, வெள்ளிச்சந்தை, காரிமங்கலம், பேரினஹள்ளி. |
அபாயகரமான நிலை ( 90 % - 100 %) | 0 | |
மித அபாயகரமான நிலை (70 % - 90%) | 7 | தருமபுரி, கரூர், கிருஷ்ணாபுரம், மொரப்பூர், பாலக்கோடு, நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிபட்டி |
பாதுகாப்பான நிலை (70 % உட்பட்ட) | 2 | தீர்த்தமலை, சன்ஞல்நத்தம் |
உவர் ஒன்றியங்கள் | - | |
மொத்தம் | 23 |