Section: State-district-profile pages are not under access control

நாமக்கல் மாவட்ட விவரக் குறிப்பு

  • நாமக்கல் மாவட்டமானது கிழக்கில் திருச்சி மாவட்டமும், மேற்கில் ஈரோடு மாவட்டமும், வடக்கில் சேலம் மாவட்டமும், தெற்கில் கரூர் மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.
  • இந்த மாவட்டத்தின் அட்சரேகை 110 11’ 00” முதல் 110 34’ 48’’ வரை வடக்கிலும் மற்றும் தீர்க்கரேகை 770 40’ 15’’முதல் 780 29’ 30’’ வரை கிழக்கிலும் அமைந்துள்ளது. இந்த மாவட்டமானது 3404 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது.

நில அமைப்பியல் மற்றும் வடிகால்:

  • நாமக்கல் மாவட்டம் கரடுமுரடான நிலப்பரப்பையும், மலைக்குன்றுகளையும் கிழக்கு தொடர்ச்சி மலையில் ஒரு பகுதியையும் கொண்டது.
  • கொல்லிமலைத் தொடர் இம்மாவட்டத்தின் முக்கிய மலையாக விளங்குகிறது. இம்மாவட்டத்தின் சாய்தளம் தெற்கு மற்றும் தென்கிழக்கை நோக்கி அமைந்துள்ளது.
  • இதன் தென்பகுதியில் காவேரி ஆறு ஓடுகின்றது. இதன் உபநதியாக திருமணி முத்தாறு விளங்குகிறது.

மழையளவு:

நாமக்கல் மாவட்டத்தின் ஐந்தாண்டின் மழையளவு இந்திய வானியல் மையம், சென்னையின்படி கீழ்க்கண்டவாறு:

பெய்த மழையளவு மி.மீ. இயல்பான மழை மி.மீ.
2017 2018 2019 2020 2021
783.7 649.3 630.5 629.2 1021.2 791.2

புவியமைப்பியல்:

பாறை வகை புவி அமைப்புகள்
கடினப்பாறை கரும்பாறை மற்றும் இலகு பாறை வண்டல் மண்.

நிலத்தடிநீர் அளவு:

இந்த மாவட்டத்தில் 34 மாதிரி கிணறுகள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் கண்காணிக்கப்படுகிறது. மழையளவானது பருவமழைக்கு முன்பும், பின்பும் நீர் அளவீடு செய்யப்படுகிறது. ஐந்தாண்டு மழையளவு கீழ்க்கண்டவாறு உள்ளது:

ஜன
2017

மே
2017

ஜன
2018

மே
2018

ஜன
2019

மே
2019

ஜன
2020

மே
2020

ஜன
2021

மே
2021

5 வருட பருவ
மழைக்கு முன்

5 வருட பருவ
மழைக்கு பின்

11.1

12.2

7.0

8.9

10.0

14.0

6.6

8.5

9.9

10.0

8.7 6.9

நீடித்த நிலைத்தன்மை:

நிலத்தடிநீர் நிலைப்பு தன்மையை உருவாக்கும் பொருட்டு மாநில மற்றும் மத்திய அரசு உதவியுடன் கீழ்க்கண்டவாறு நீர்செறிவூட்டு கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளது.

வருவாய் உள்வட்டம் மூலம் வகைப்படுத்தல்:

நீர்பயன்பாட்டின் அடிப்படையில் இம்மாவட்டத்தை மார்ச் 2020-ம் ஆண்டில் வருவாய் உள்வட்டம் மூலம் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது.

நீர்வெளிக் கொணருதல் / பயன்பாடு அடிப்படையில் (மார்ச் 2020-ன்படி) வருவாய் உள்வட்டம் எண்ணிக்கை வருவாய் உள்வட்டங்கள்
அதிநுகர்வு நிலை ( 100 % மேல்) 22 முள்ளிகுறிச்சி, நல்லூர், காளப்பநாயக்கன் பட்டி, மங்கலாபுரம், நாமகிரிப்பேட்டை, புதுச்சத்திரம், ராசிபுரம்,
சேந்தமங்கலம், வெண்ணாத்தூர், மல்லாசமுத்திரம், நாமக்கல், எருமைப்பட்டி, நல்லிபாளையம், செல்லம்பட்டி, மோகனூர், பரமத்தி,
வையப்பமலை, வேலையம்பட்டி, அளங்காநத்தம், பந்தமங்கலம், குமாரபாளையம் திருச்செங்கோடு
அபாயகரமான நிலை ( 90 % - 100 %) 1 இலச்சிபாளையம்
மித அபாயகரமான நிலை (70 % - 90%) 4 ஜேடர்பாளையம், பள்ளிப்பட்டி , மாணிக்கம்பாளையம், மொலசை
பாதுகாப்பான நிலை (70 % உட்பட்ட) 3 பள்ளிபாளையம், திருபுலிநாடு, வாழவந்தி-நாடு
உவர் ஒன்றியங்கள் -  
மொத்தம் 30