Section: State-district-profile pages are not under access control

திண்டுக்கல் மாவட்ட விவரம்

  • இம்மாவட்டத்தின் மொத்த மக்கட் தொகை 2161367 ஆகும். இவற்றில் 807559 நகரகப் பகுதிகளிலும் 1353808 ஊரகப் பகுதிகளிலும் வசிக்கின்றனர்.
  • திண்டுக்கல் மாவட்டத்தில் திருச்சிராப்பள்ளி வடகிழக்கு பகுதி எல்லையாக உள்ளது. கரூர் மாவட்டம் வடக்கு பகுதியிலும், திருப்பூர் மாவட்டம் மேற்கு பகுதியிலும், மதுரை மற்றும் மாவட்டம் தென்பகுதி எல்லையாக உள்ளது.
  • இந்த மாவட்டத்தின் அட்சரேகை 100 05’ 00’’ முதல் 110 49’ 50’’ வரை வடக்கிலும் மற்றும் தீர்க்கரேகை 770 16’ 30’’முதல் 780 19’ 30’’ வரை கிழக்கிலும் அமைந்துள்ளது. இந்த மாவட்டமானது 6058 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது.

நில அமைப்பியல் மற்றும் வடிகால்:

  • திண்டுக்கல் மாவட்டம் காவேரி, வைகை மற்றும் பாம்பார் ஆகியவற்றினை வடிநிலமாகக் கொண்டது. இதன் வடக்கு பகுதி காவேரி வடிநிலமாக உள்ளது.
  • இம்மாவட்டத்தின் முக்கிய நதிகளான சண்முகாநதி, நஞ்காஞ்சியாறு மற்றும் கொடநார் உள்ளது. தென் பகுதியில் வைகை நதி ஓடுகிறது.
  • இந்த மாவட்டத்தின் முக்கிய நதியாக மருதா நதி, மஞ்சளாறு, வைகை ஆகிய நதிகள் ஓடுகின்றன.
  • பாம்பார், மாவட்டத்தின் கிழக்குப் பகுதியை வடிநிலமாகக் கொண்டது. மாவட்டத்தின் சிறு நதிகளாக திருமணி முத்தாறு, பாலாறு, பொருந்தலாறு ஓடுகின்றன.

மழையளவு:

திண்டுக்கல் மாவட்டத்தின் ஐந்தாண்டின் மழையளவு இந்திய வானியல் மையம், சென்னையின்படி கீழ்க்கண்டவாறு:

பெய்த மழையளவு மி.மீ. இயல்பான மழை மி.மீ.
2017 2018 2019 2020 2021
925.5 799.9 712.8 959.4 1238.5 985

புவியமைப்பியல்:

பாறை வகை புவி அமைப்புகள்
கடினப்பாறை இலகு பாறை, கூழாங்கல், கரும்பாறை, சிகப்பு கல்மண்

நிலத்தடிநீர் அளவு:

இந்த மாவட்டத்தில் 51 மாதிரி கிணறுகள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் கண்காணிக்கப்படுகிறது. மழையளவானது பருவமழைக்கு முன்பும், பின்பும் நீர் அளவீடு செய்யப்படுகிறது. ஐந்தாண்டு மழையளவு கீழ்க்கண்டவாறு உள்ளது:

ஜன
2017

மே
2017

ஜன
2018

மே
2018

ஜன
2019

மே
2019

ஜன
2020

மே
2020

ஜன
2021

மே
2021

5 வருட பருவ
மழைக்கு முன்

5 வருட பருவ
மழைக்கு பின்

15.2

21.5

10.0

17.0

9.7

16.3

9.6

20.9

9.4

18.9

16.1

9.0

நீடித்த நிலைத்தன்மை:

நிலத்தடிநீர் நிலைப்பு தன்மை உருவாக்கும் பொருட்டு மாநில மற்றும் மத்திய அரசு உதவியுடன் கீழ்க்கண்டவாறு நீர்செறிவூட்டும் கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளது.

வருவாய் உள்வட்டம் மூலம் வகைப்படுத்தல்:

நீர் பயன்பாட்டின் அடிப்படையில் இம்மாவட்டத்தினை மார்ச் 2020-ம் ஆண்டில் வருவாய் உள்வட்டம் மூலம் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது.

நீர்வெளிக் கொணருதல் / பயன்பாடு அடிப்படையில் (மார்ச் 2020-ன்படி) வருவாய் உள்வட்டம் எண்ணிக்கை வருவாய் உள்வட்டங்கள்
அதிநுகர்வு நிலை( 100 % மேல்) 26 ஆயக்குடி, வத்தலக்குண்டு, அய்யம்பாளையம், சின்னக்காம்பட்டி, சின்னாளப்பட்டி திண்டுக்கல்(west) தேவத்தூர், தருமத்துபட்டி
,எரிவோடு, கள்ளிமந்தயம், கொட்டநத்தம், கோவிலூர், அய்யலூர், பாளையம்,
புலியூர்நத்தம், சிலவத்தூர், பாலகண்ணூத்து, ஒருத்தட்டு, விருவேடு, தொப்பம்பட்டி ஒட்டன்சத்திரம்,
ரெட்டியார்சத்திரம், சாணார்பட்டி, வடமதுரை, வேடசந்தூர், நிலக்கோட்டை.
அபாயகரமான நிலை( 90 % - 100 %) 5 ஆத்தூர், கம்பிலியாம்பட்டி கோரைக்காடு,நெய்காரபட்டி பிள்ளையார்நத்தம்
மித அபாயகரமான நிலை(70 % - 90%) 5 திண்டுக்கல் (East), நத்தம், பாப்பாரப்பட்டி, ரெட்டியார்பட்டி, செந்துரை
பாதுகாப்பான நிலை(70 % உட்பட்ட) 4 கொடைக்கானல், , பழநி, பண்ணைக்காடு, தாங்கிகுடி
உவர் ஒன்றியங்கள் -  
மொத்தம் 40