Section: State-district-profile pages are not under access control

இராமநாதபுரம் மாவட்ட விவரக் குறிப்பு

  • இம்மாவட்டத்தின் மொத்த மக்கட் தொகை 13,53,445 ஆகும். இவற்றில் 4,10,699 நகரகப் பகுதிகளிலும் 9,42,746 ஊரகப் பகுதிகளிலும் வசிக்கின்றனர்.
  • இராமநாதபுரம் மாவட்டமானது ஒரு கடற்கரை சார்ந்த மாவட்டமாகும். இதன் கிழக்கு மற்றும் தெற்கில் வங்காள விரிகுடாவும், வடக்கில் சிவகங்கை மாவட்டமும், மேற்கில் விருதுநகர்ம் மாவட்டமும், தென் மேற்கில் தூத்துக்குடி மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.
  • இந்த மாவட்டத்தின் அட்சரேகை 90 06’ 00” முதல் 090 54’ 00’’ வரை வடக்கிலும் மற்றும் தீர்க்கரேகை 780 13’ 00’’முதல் 790 26’ 00’’ வரை கிழக்கிலும் அமைந்துள்ளது. இந்த மாவட்டமானது 4175 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது.

நில அமைப்பியல் மற்றும் வடிகால்:

இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் சமதளமாக உள்ளது. பருவமழை காலங்களில் ஓடக்கூடிய நதிகளாக சருகனி ஆறு, மணிமுத்தாறு, வைகை ஆறு, வைப்பார் ஆகியவை உள்ளன.

மழையளவு:

இராமநாதபுரம் மாவட்டத்தின் ஐந்தாண்டின் மழையளவு இந்திய வானியல் மையம், சென்னையின்படி கீழ்க்கண்டவாறு:

பெய்த மழையளவு மி.மீ. இயல்பான மழை மி.மீ.
2017 2018 2019 2020 2021
606.6 649.7 923.2 860.2 1040.6 985

புவியமைப்பியல்:

பாறை வகை புவி அமைப்புகள்
கடினப்பாறை ( 2 %) இலகு பாறை, கூழாங்கல் (வெ), வண்டல் மண்.
படிவுப்பாறை (98 %) மணல்கல், சிகப்பு களி, வண்டல்மண், கடல் படிமண்

நிலத்தடிநீர் அளவு:

இந்த மாவட்டத்தில் 91 மாதிரி கிணறுகள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் கண்காணிக்கப்படுகிறது. மழையளவானது பருவமழைக்கு முன்பும், பின்பும் நீர் அளவீடு செய்யப்படுகிறது. ஐந்தாண்டு மழையளவு கீழ்க்கண்டவாறு உள்ளது.:

ஜன
2017

மே
2017

ஜன
2018

மே
2018

ஜன
2019

மே
2019

ஜன
2020

மே
2020

ஜன
2021

மே
2021

5 வருட பருவ
மழைக்கு முன்

5 வருட பருவ
மழைக்கு பின்

17.8

21.7

20.4

33.8

19.8

23.7

17.5

22.2

16.9

19.5

20.6 15.5

நீடித்த நிலைத்தன்மை:

நிலத்தடிநீர் நிலைப்பு தன்மையை உருவாக்கும் பொருட்டு மாநில மற்றும் மத்திய அரசு உதவியுடன் கீழ்க்கண்டவாறு நீர்செறிவூட்டும் கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளது.

வருவாய் உள்வட்டம் மூலம் வகைப்படுத்தல்:

நீர்பயன்பாட்டின் அடிப்படையில் இம்மாவட்டத்தை மார்ச் 2020-ம் ஆண்டில் வருவாய் உள்வட்டம் மூலம் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது.

நீர்வெளிக் கொணருதல் / பயன்பாடு அடிப்படையில் (மார்ச் 2020-ன்படி) வருவாய் உள்வட்டம் எண்ணிக்கை வருவாய் உள்வட்டங்கள்
அதிநுகர்வு நிலை ( 100 % மேல்) 0  
அபாயகரமான நிலை ( 90 % - 100 %) 0  
மித அபாயகரமான நிலை (70 % - 90%) 0  
பாதுகாப்பான நிலை (70 % உட்பட்ட) 29 ஆனந்தூர், அபிராமம், புகளூர், தேவி பட்டினம், காக்கூர், கமுதி, கிழக்கு கமுதி, கமுதி (மே), கீழத்துவள், கிளியூர், கோவிலாங்குளம்,
அப்பனூர், மண்டபம், நயினார்கோவில், ஆர்.எஸ். மங்கலம், மஞ்சூர், இராமநாதபுரம், பரமக்குடி,
திருவாடனை, முதுகுளத்தூர் (வ), மேலக் கொடுமலூர், பார்த்திபநூர், பெருநாசை,
கீழக்கரை, புள்ளூர், இராமேஸ்வரம், சோழந்தூர், டி.வி. மங்கை, திருவேணி.
உவர் ஒன்றியங்கள் 9 கடலாடி, மேலசேவனூர், எஸ்.தரக்குடி, சாயல்குடி, சிக்கல்,
முதுகளத்தூர் (எஸ்), திருபுலானி, மங்கலக்குடி, தொண்டி.
மொத்தம் 38