Section: State-district-profile pages are not under access control

தேனி மாவட்ட விவரக் குறிப்பு

  • இம்மாவட்டத்தின் மொத்த மக்கட் தொகை 12,45,899 ஆகும். இவற்றில் 6,70,481 மக்கள் நகரகப் பகுதிகளிலும் 5,75,418 மக்கள் ஊரகப் பகுதிகளிலும் வசிக்கின்றனர்.
  • தேனி மாவட்டத்தின் கிழக்கில் மதுரை மாவட்டமும், மேற்கு மற்றும் தெற்காக கேரள மாநிலமும், வடக்கில் திண்டுக்கல் மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளது.
  • இந்த மாவட்டத்தின் அட்சரேகை 90 32’ 00’’ முதல் 100 15’ 00’’ வரை வடக்கிலும் மற்றும் தீர்க்கரேகை 770 10’ 00’’முதல் 770 40’ 00’’ வரை கிழக்கிலும் அமைந்துள்ளது. இந்த மாவட்டமானது 2869 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது.

நில அமைப்பியல் மற்றும் வடிகால்:

  • தேனி மாவட்டம் மேற்குப் பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையும் மற்றும் கேரளா மாநிலமும் அமைந்துள்ளன.
  • மேற்கு தொடர்ச்சி மலை காரணமாக நிலபரப்பு மேற்கிலிருந்து கிழக்காக சாய்தளமாக அமைந்துள்ளது. சில பகுதி தெற்கிலிருந்து வடக்கு நோக்கி அமைந்துள்ளது மற்றும் மேற்குப் பகுதியிலும் ஆண்டிப்பட்டி மலை தொடர் தென்கிழக்கு பகுதியிலும் அமைந்துள்ளன.
  • வடக்குப் பகுதியில் கொடைக்கானல் மலைத் தொடர் அமைந்துள்ளது.
  • இந்த மாவட்டம், வைகை நதியின் நீர்பிடிப்பு பகுதியாக விளங்குகிறது மற்றும் வைகையாறு, சுருளியாறு, பெரியாறு, கொட்டாக்குடி ஆறு ஆகியவை பாய்கின்றன.
  • மேலும் கூத்தான்ஜி ஆறு, கொட்டக்குடி ஆறு, தேனி ஆறு மற்றும் சில உள்ளூர் ஓடைகள் வைகை ஆற்றின் உபநதியாகும்.

மழையளவு:

தேனி மாவட்டத்தின் ஐந்தாண்டின் மழையளவு இந்திய வானியல் மையம், சென்னையின்படி கீழ்க்கண்டவாறு:

பெய்த மழையளவு மி.மீ. இயல்பான மழை மி.மீ.
2017 2018 2019 2020 2021
1127.0 1137.8 1057.7 921.9 1099.5 985

புவியமைப்பியல்:

பாறை வகை புவி அமைப்புகள்
கடினப்பாறை இலகு பாறை, கூழாங்கல் (வெ), வண்டல் மண், சுண்ணாம்பு கிரானைட்

நிலத்தடிநீர் அளவு:

இந்த மாவட்டத்தில் 21 மாதிரி கிணறுகள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் கண்காணிக்கப்படுகிறது. மழையளவானது பருவமழைக்கு முன்பும், பின்பும் நீர் அளவீடு செய்யப்படுகிறது. ஐந்தாண்டு மழையளவு கீழ்க்கண்டவாறு உள்ளது:

ஜன
2017

மே
2017

ஜன
2018

மே
2018

ஜன
2019

மே
2019

ஜன
2020

மே
2020

ஜன
2021

மே
2021

5 வருட பருவ
மழைக்கு முன்

5 வருட பருவ
மழைக்கு பின்

18.0

21.3

16.1

15.2

14.0

16.3

13.4

15.9

12.1

14.0

14.1 12.5

நீடித்த நிலைத்தன்மை:

நிலத்தடிநீர் நிலைப்பு தன்மை உருவாக்கும் பொருட்டு மாநில மற்றும் மத்திய அரசு உதவியுடன் கீழ்க்கண்டவாறு நீர்செறிவூட்டும் கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளது.

வருவாய் உள்வட்டம் மூலம் வகைப்படுத்தல்:

நீர் பயன்பாட்டின் அடிப்படையில் இம்மாவட்டத்தினை மார்ச் 2020-ம் ஆண்டில் வருவாய் உள்வட்டம் மூலம் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது.

நீர்வெளிக் கொணருதல் / பயன்பாடு அடிப்படையில் (மார்ச் 2020-ன்படி) வருவாய் உள்வட்டம் எண்ணிக்கை வருவாய் உள்வட்டங்கள்
அதிநுகர்வு நிலை ( 100 % மேல்) 2 எரசக்கநாயக்கனூர், தேவாராம்
அபாயகரமான நிலை ( 90 % - 100 %) 2 கண்டமனூர், ராஜதாணி
மித அபாயகரமான நிலை (70 % - 90%) 8 தேனி, மயிலாடும்பாறை உத்தமபாளையம், ஆண்டிப்பட்டி ,
கோடிவிலார்பட்டி, தேவதானப்பட்டி கோடாங்கிபட்டி,தென்கரை
பாதுகாப்பான நிலை (70 % உட்பட்ட) 5 போடிநாயக்கனூர், சின்னமனூர், கம்பம், ராசிங்கபுரம், மார்கயன்கோட்டை
உவர் ஒன்றியங்கள் -  
மொத்தம் 17