Section: State-district-profile pages are not under access control

திருவாரூர் மாவட்ட சுயவிவரம்

  • திருவாரூர் மாவட்டமானது வடக்கில் நாகப்பட்டினம் மாவட்டத்தையும், தெற்கில் பாக் ஜலசந்தியையும், கிழக்கில் காரைக்காலின் ஒரு பகுதியாக பாண்டிச்சேரியும், மேற்கு வடமேற்காக தஞ்சாவூர் மாவட்டத்தையும் எல்லையாக கொண்டுள்ளது.
  • இந்த மாவட்டத்தின் அட்சரேகை 100 10’ 00’’ முதல் 110 01’ 00’’ வரை வடக்கிலும் மற்றும் தீர்க்கரேகை 790 13’ 00’’ முதல் 790 43’ 00’’ வரை கிழக்கிலும் அமைந்துள்ளது. இந்த மாவட்டமானது 2417 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது.

நில அமைப்பியல் மற்றும் வடிகால்:

  • திருவாரூர் மாவட்டம் சமதளப் பகுதியாகும். இம்மாவட்டம் கிழக்கு, வடகிழக்கை மிதமான சாய்வுப் பகுதியாக வடக்கு மற்றும் தென்கிழக்கை நோக்கியுள்ளது.
  • இம் மாவட்டத்தின்அதிகமான உயரப்பகுதி 30 மீட்டர் ஆகும்.
  • இம் மாவட்டமானது காவிரி உபவடிநிலம், வெண்ணாறு உப வடிநிலம், புதிய வளநாடு பகுதியைக் கொண்டது.
  • இம்மாவட்ட விவசாயமானது வெண்ணாறு, வெட்டாறு, முடிகொண்டான், அரசலாறு ஆகியவற்றைச் சார்ந்துள்ளது.

மழையளவு:

திருவாரூர் மாவட்டத்தின் ஐந்தாண்டின் மழையளவு இந்திய வானியல் மையம், சென்னையின்படி கீழ்க்கண்டவாறு:

பெய்த மழையளவு மி.மீ. இயல்பான மழை மி.மீ.
2017 2018 2019 2020 2021
1247.9 971.6 1128.6 1303.7 1796.2 985

புவியமைப்பியல்:

பாறை வகை புவி அமைப்புகள்
படிவுப்பாறை 90 % லேட்டிரைட், மணல் மற்றும் சில்ட், மணற்பாறை, ஆற்று வண்டல், கடற் படிவங்கள்

நிலத்தடிநீர் அளவு:

இந்த மாவட்டத்தில் 19 மாதிரி கிணறுகள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் கண்காணிக்கப்படுகிறது. மழையளவானது பருவமழைக்கு முன்பும், பின்பும் நீர் அளவீடு செய்யப்படுகிறது. ஐந்தாண்டு மழையளவு கீழ்க்கண்டவாறு உள்ளது:

ஜன
2017

மே
2017

ஜன
2018

மே
2018

ஜன
2019

மே
2019

ஜன
2020

மே
2020

ஜன
2021

மே
2021

5 வருட பருவ
மழைக்கு முன்

5 வருட பருவ
மழைக்கு பின்

15.3

19.1

13.8

18.2

12.9

15.8

9.1

13.6

5.4

11.2

13.4 10.0

நீடித்த நிலைத்தன்மை:

நிலத்தடிநீர் நிலைப்பு தன்மையை உருவாக்கும் பொருட்டு மாநில மற்றும் மத்திய அரசு உதவியுடன் கீழ்க்கண்டவாறு நீர்செறிவூட்டும் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.

வருவாய் உள்வட்டம் மூலம் வகைப்படுத்தல்:

நீர் பயன்பாட்டின் அடிப்படையில் இம்மாவட்டத்தை மார்ச் 2020-ம் ஆண்டில் வருவாய் உள்வட்டம் மூலம் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது.

நீர்வெளிக் கொணருதல் / பயன்பாடு அடிப்படையில் (மார்ச் 2020-ன்படி) வருவாய் உள்வட்டம் எண்ணிக்கை வருவாய் உள்வட்டங்கள்
அதிநுகர்வு நிலை ( 100 % மேல்) 10 குடவாசல், அகரதிருமலம், வலங்கைமான், ஆலங்குடி, ஆவூர், கொறடாச்சேரி,
குளிக்கரை, பேரளம், திருக்கண்ணமங்கை, திருவிழிமழலை
அபாயகரமான நிலை ( 90 % - 100 %) 1 வடபதிமங்கலம்
மித அபாயகரமான நிலை (70 % - 90%) 3 கூத்தநல்லூர், சன்னநல்லூர், நன்னிலம்
பாதுகாப்பான நிலை (70 % உட்பட்ட) 9 கோட்டூர்(டி), குன்னியூர், மன்னார்குடி, நீடாமங்கலம், பாளையூர் (டி),
தாழையாமங்கலம், திருவாரூர், உள்ளிக்கோட்டை, வடவூர்
உவர் ஒன்றியங்கள் 4 திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, எடையூர், ஆலத்தம்பாடி
மொத்தம் 27