Section: State-district-profile pages are not under access control

திருவள்ளூர் மாவட்ட விவரக் குறிப்பு

  • திருவள்ளூர் மாவட்டமானது தமிழ்நாட்டின் வடக்குப் பகுதியிலி உள்ள கடலோர மாவட்டங்களில் முதன்மையானது.
  • இம்மாவட்டமானது கிழக்கில் வஙகாள விரிகுடாவும், மேற்கில் தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டமும், ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டமும், வடக்கில் ஆந்திர மாநிலத்தின் நெல்லூர் மாவட்டமும், தெற்கில் காஞ்சிபுரம் மாவட்டமும் எல்லையாக அமைந்துள்ளது.
  • இந்த மாவட்டத்தின் அட்சரேகை 120 55’ 00’’ முதல் 130 35’ 00’’ வரை வடக்கிலும் மற்றும் தீர்க்கரேகை 790 17’ 00’’ முதல் 800 21’ 00’’ வரை கிழக்கிலும் அமைந்துள்ளது. இந்த மாவட்டமானது 3550 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது.

நில அமைப்பியல் மற்றும் வடிகால்:

  • திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு வகையான சமதளம் மற்றும் மலைக்குன்றுகள் அமைந்துள்ளது.
  • திருத்தணி மற்றும் ஆர்.கே. பேட் மலைக்குன்று ஆகியவை மாவட்டத்தின் முக்கிய அமைப்பாகும். இம்மாவட்டத்தில் கடற்கரை கிழக்குப் பகுதியில் உள்ளது.
  • ஆரணி ஆறு, கொற்றலை ஆறு, அடையாறு, கூவம் ஆகிய நதிகள் ஓடுகின்றன.
  • ஆரணி ஆறு ஆந்திர மாநிலத்தில் தோன்றி பொன்னேரி மற்றும் திருவள்ளூர் வட்டம் வழியாக புலிக்காட் அருகில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
  • கூவம் ஆறு கூவம் கண்மாயில் தோன்றி உபரிநீர் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் வழியாக செம்பரம்பாக்கம் ஏரியை வந்தடைகிறது.
  • பூண்டி நீர்த்தேக்கம், செங்குன்றம் நீர்த்தேக்கம் ஆகியவை இங்குள்ளது. புலிக்காட் ஏரி முக்கிய சதுப்பு நிலமாக விளங்குகிறது.

மழையளவு:

திருவள்ளூர் மாவட்டத்தின் ஐந்தாண்டின் மழையளவு இந்திய வானியல் மையம், சென்னையின்படி கீழ்க்கண்டவாறு:

பெய்த மழையளவு மி.மீ. இயல்பான மழை மி.மீ.
2017 2018 2019 2020 2021
1198.0 733.4 1174.2 1229.0 1809.6 985

புவியமைப்பியல்:

பாறை வகை புவி அமைப்புகள்
படிவுப்பாறை 80% Hard Rock 20%
கடினப்பாறை 20% மென்களிக்கல், ஆற்றுவண்டல், கடற்படிவஙகள்

நிலத்தடிநீர் அளவு:

இந்த மாவட்டத்தில் 35 மாதிரி கிணறுகள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் கண்காணிக்கப்படுகிறது. மழையளவானது பருவமழைக்கு முன்பும், பின்பும் நீர் அளவீடு செய்யப்படுகிறது. ஐந்தாண்டு மழையளவு கீழ்க்கண்டவாறு உள்ளது:

ஜன
2017

மே
2017

ஜன
2018

மே
2018

ஜன
2019

மே
2019

ஜன
2020

மே
2020

ஜன
2021

மே
2021

5 வருட பருவ
மழைக்கு முன்

5 வருட பருவ
மழைக்கு பின்

8.5

13.9

8.9

21.7

9.5

12.3

8.5

15.3

5.9

14.7

13.1 7.3

நீடித்த நிலைத்தன்மை:

நிலத்தடிநீர் நிலைப்பு தன்மையை உருவாக்கும் பொருட்டு மாநில மற்றும் மத்திய அரசு உதவியுடன் கீழ்க்கண்டவாறு நீர்செறிவூட்டும் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.

வருவாய் உள்வட்டம் மூலம் வகைப்படுத்தல்:

நீர் பயன்பாட்டின் அடிப்படையில் இம்மாவட்டத்தை மார்ச் 2020-ம் ஆண்டில் வருவாய் உள்வட்டம் மூலம் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது.

நீர்வெளிக் கொணருதல் / பயன்பாடு அடிப்படையில் (மார்ச் 2020ன்படி) வருவாய் உள்வட்டம் எண்ணிக்கை வருவாய் உள்வட்டங்கள்
அதிநுகர்வு நிலை ( 100 % மேல்) 7 ஆவடி, பூந்தமல்லி, ஆர்.கே.பேட், திருநின்றவூர் , வெள்ளணுர்,திருமுல்லைவாயல் வயளநல்லூர்.
அபாயகரமான நிலை ( 90 % - 100 %) 2 திருத்தணி , வெங்கட்டூர் கும்மிடிப்பூண்டி
மித அபாயகரமான நிலை (70 % - 90%) 17 பாலபுரம் , செருக்கானூர் , எறும்பி , மப்பேடு , மணவூர்,கனகம்மாசத்திரம், கன்னிகைப்பேர் , பள்ளிக்கட்டு, மோரை,
பூண்டி, பொன்னிமாங்காடு, திருமழிசை, திரூர், வெள்ளியூர். நேமம் புழல்,ஊத்துக்கோட்டை.
பாதுகாப்பான நிலை (70 % உட்பட்ட) 20 எளாவூர், ஞாயிறு, ஆரணி கோளூர், மாதப்பாக்கம், பாண்டூர், பெண்ணலூர்பேட்டை, பெரியபாளையம், வேலக்காபுரம் பொன்னேரி,
பூவலம்பேடு, சோழவரம், திருவாலங்காடு, திருவள்ளூர்,திருப்பாலைவனம். காட்டூர், அம்மணம்பாக்கம். கும்முடிப்பூண்டி கடம்பத்தூர், பொதட்டூர்
உவர் ஒன்றியங்கள் 1 மீஞ்சூர்
மொத்தம் 47