விருதுநகர் மாவட்ட விவரக் குறிப்பு
- இம்மாவட்டத்தின் மொத்த மக்கட் தொகை 19,42,288 ஆகும். இவற்றில் 9,80,226 நகரகப் பகுதிகளிலும் 9,62,062 ஊரகப் பகுதிகளிலும் வசிக்கின்றனர்.
- விருதுநகர் மாவட்டம், தமிழ்நாட்டின் தென்மேற்கு பகுதியிலும், கிழக்கில் இராமநாதபுரம் மாவட்டமும், மேற்கில் கேரள மாநிலமும், வடக்கில் மதுரை, தேனி மாவட்டங்களும், தெற்கில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் எல்லைகளாக அமைந்துள்ளது.
- இந்த மாவட்டத்தின் அட்சரேகை 090 12’ முதல் 090 47’ வரை வடக்கிலும் மற்றும் தீர்க்கரேகை 770 23’முதல் 780 25’ வரை கிழக்கிலும் அமைந்துள்ளது. இந்த மாவட்டமானது 4283 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது.
நில அமைப்பியல் மற்றும் வடிகால்:
- விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம் வட்டத்தின் கரடு முரடான பகுதியாக உள்ளது.
- கிழக்குப் பகுதி சமதளமாக உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை வடகிழக்கு மற்றும் தென்மேற்கு நோக்கி மலைகுன்றுகள் சாத்தூர் மற்றும் அருப்புக்கோட்டை பகுதியில் உள்ளது.
- இம்மாவட்டம் வைப்பார், மற்றும் குண்டார் வடிநில பகுதியாக உள்ளது. வைப்பார் திருநெல்வேலி மாவட்டம், சிவகிரி அருகிலுள்ள எச்சமலையில் தோன்றுகிறது.
- இது கிழக்கு மற்றும் தென் கிழக்காக மன்னார்வளைகுடாவில் கலக்கிறது. இந்த ஆற்றுக்கு துணை நதியாக அர்ஜூனா நதி விளங்குகிறது.
மழையளவு:
விருதுநகர் மாவட்டத்தின் ஐந்தாண்டின் மழையளவு இந்திய வானியல் மையம், சென்னையின்படி கீழ்க்கண்டவாறு:
பெய்த மழையளவு மி.மீ. | இயல்பான மழை மி.மீ. | ||||
---|---|---|---|---|---|
2017 | 2018 | 2019 | 2020 | 2021 | |
800.0 | 759.5 | 713.7 | 855.0 | 968.4 | 985 |
புவியமைப்பியல்:
பாறை வகை | புவி அமைப்புகள் | ||||
கடினப்பாறை (90 %) | இலகு பாறை, கூழாங்கல் (வெ), வண்டல் மண், சுண்ணாம்பு மண் | ||||
படிவுப்பாறை (10 %) | மணல் கலந்த களி |
நிலத்தடிநீர் அளவு:
இந்த மாவட்டத்தில் 60 மாதிரி கிணறுகள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் கண்காணிக்கப்படுகிறது. மழையளவானது பருவமழைக்கு முன்பும், பின்பும் நீர் அளவீடு செய்யப்படுகிறது.:
ஐந்தாண்டு மழையளவு கீழ்க்கண்டவாறு உள்ளது:
ஜன |
மே |
ஜன |
மே |
ஜன |
மே |
ஜன |
மே |
ஜன |
மே |
5 வருட பருவ |
5 வருட பருவ |
10.8 |
11.5 |
5.0 |
10.4 |
5.3 |
8.2 |
5.2 |
9.6 |
4.3 |
7.6 |
8.2 | 5.3 |
நீடித்த நிலைத்தன்மை:
நிலத்தடிநீர் நிலைப்பு தன்மை உருவாக்கும் பொருட்டு மாநில மற்றும் மத்திய அரசு உதவியுடன் கீழ்க்கண்டவாறு நீர்செறிவூட்டும் கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளது.
நீர்செறிவூட்டும் கட்டமைப்புகள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
தடுப்பணை | கசிவு நீர் குட்டை | செறிவூட்டு பள்ளங்கள் | செறிவூட்டு படுகை | மற்றவை | ஊரணி | பழுதான ஆழ்குழாய் செறிவூட்டல் | நீர் செறிவூட்டுக் குழாய்கள் | மேற்கூரை மழைநீர் சேகரிப்பு கட்டமைப்கள் | நீரழுத்த பாறை வெடிப்பு | மொத்தம் |
358 | 18 | 376 |
வருவாய் உள்வட்டம் மூலம் வகைப்படுத்தல்:
நீர் பயன்பாட்டின் அடிப்படையில் இம்மாவட்டத்தினை மார்ச் 2020-ம் ஆண்டில் வருவாய் உள்வட்டம் மூலம் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது
நீர்வெளிக் கொணருதல் / பயன்பாடு அடிப்படையில் (மார்ச் 2020-ன்படி) | வருவாய் உள்வட்டம் எண்ணிக்கை | வருவாய் உள்வட்டங்கள் |
---|---|---|
அதிநுகர்வு நிலை ( 100 % மேல்) | 5 | சோழபுரம் கீழகுலராமன் நத்தம்பட்டி பிள்ளையார்குளம் வெம்பக்கோட்டை |
அபாயகரமான நிலை ( 90 % - 100 %) | 5 | ஆமாத்தூர்,ஆலங்குளம்,மல்லாங்கிணர் மங்களம் வச்சக்கரப்பட்டி |
மித அபாயகரமான நிலை (70 % - 90%) | 10 | எலயாரம்பண்ணை, இயன்கொள்ளிகொண்டான் கோட்டையூர் மல்லி,ஒண்டிப்புல்லணைக்கனுர் ராஜபாளையம், சல்வார்பட்டி வத்ராப்,ஸ்ரீவில்லுபுத்தூர்,சிவகாசி |
பாதுகாப்பான நிலை (70 % உட்பட்ட) | 19 | அருப்புக்கோட்டை, காரியாப்பட்டி, நரிக்குடி, சாத்தூர், திருச்சுழி,எ.முக்குலம், கள்ளக்குறிச்சி,மண்டபசலை,முடுக்கன்குளம் நல்லி,நான்மணி,படிந்தால்,பாளையம்பட்டி,பந்தல்குடி பரலட்ச்சி,சேத்தூர்,திருத்தங்கள்,வீரசோழன், விருதுநகர். |
உவர் ஒன்றியங்கள் | - | |
மொத்தம் | 39 |