Section: State-district-profile pages are not under access control

கரூர் மாவட்ட விவரக் குறிப்பு

  • கரூர் மாவட்டத்தின் வடகிழக்கில் திருச்சி, மேற்கில் திருப்பூர், வடக்கில் நாமக்கல், மற்றும் தெற்கில் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்கள் எல்லைகளாக உள்ளன.
  • இந்த மாவட்டத்தின் அட்சரேகை 100 37’ முதல் 110 12’ வரை வடக்கிலும் மற்றும் தீர்க்கரேகை 770 46’ முதல் 780 15’ வரை கிழக்கிலும் அமைந்துள்ளது. இந்த மாவட்டமானது 2901 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது.

நில அமைப்பியல் மற்றும் வடிகால்:

  • கரூர் மாவட்டம் பெருவாரியாக மலைகளால் சூழப்பட்டுள்ளது. அவையாவன அய்யார்மலை, தாந்தோணிமலை, வேலாயுதம்பாளையம் மலை ஆகும்.
  • இம்மாவட்டம் முழுவதும் காவேரி வடிநிலமாக உள்ளது.
  • இதன் வடக்கு எல்லையில் காவேரி நதி பாய்கின்றது மற்றும் துணை நதியான அமராவதி, கடவனார் மற்றும் நொய்யல் மேற்குப் பகுதியில் பாய்கின்றது.

மழையளவு:

கரூர் மாவட்டத்தின் ஐந்தாண்டின் மழையளவு இந்திய வானியல் மையம், சென்னையின்படி கீழ்க்கண்டவாறு:

பெய்த மழையளவு மி.மீ. இயல்பான மழை மி.மீ.
2017 2018 2019 2020 2021
715.3 468.4 524.5 684.2 919.8 628.9

புவியமைப்பியல்:

பாறை வகை புவி அமைப்புகள்
கடினப்பாறை கரும்பாறை மற்றும் ஆற்று வண்டல் மண்

நிலத்தடிநீர் அளவு:

இந்த மாவட்டத்தில் 34 மாதிரி கிணறுகள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் கண்காணிக்கப்படுகிறது. மழையளவானது பருவமழைக்கு முன்பும், பின்பும் நீர் அளவீடு செய்யப்படுகிறது. ஐந்தாண்டு மழையளவு கீழ்க்கண்டவாறு உள்ளது:

ஜன
2017

மே
2017

ஜன
2018

மே
2018

ஜன
2019

மே
2019

ஜன
2020

மே
2020

ஜன
2021

மே
2021

5 வருட பருவ
மழைக்கு முன்

5 வருட பருவ
மழைக்கு பின்

22.7

31.3

29.8

22.9

13.6

20.8

17.8

21.7

15.3

21.3

19.7 17.0

நீடித்த நிலைத்தன்மை:

நிலத்தடிநீர் நிலைப்பு தன்மையை உருவாக்கும் பொருட்டு மாநில மற்றும் மத்திய அரசு உதவியுடன் கீழ்க்கண்டவாறு நீர்செறிவூட்டும் கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளது.

வருவாய் உள்வட்டம் மூலம் வகைப்படுத்தல்:

நீர்பயன்பாட்டின் அடிப்படையில் இம்மாவட்டத்திற்கு மார்ச் 2020-ம் ஆண்டில் வருவாய் உள்வட்டம் மூலம் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது.

நீர்வெளிக் கொணருதல் / பயன்பாடு அடிப்படையில் (மார்ச் 2020-ன்படி) வருவாய் உள்வட்டம் எண்ணிக்கை வருவாய் உள்வட்டங்கள்
அதிநுகர்வு நிலை ( 100 % மேல்) 14 கடவூர், கரூர், கட்டளை, மயிலம்பட்டி, பல்லப்பட்டி, பனஞ்சபட்டி, தென்னிலை,
தொரன்கால்பட்டி, வங்கல், வெள்ளியணை, தோகைமலை, கே.பரமத்தி. புகலூர், தாளப்பட்டி
அபாயகரமான நிலை ( 90 % - 100 %) 0  
மித அபாயகரமான நிலை (70 % - 90%) 4 அரவக்குறிச்சி, சித்தலவாடி,, சின்னதாராபுரம், மணிமங்கலம்
பாதுகாப்பான நிலை (70 % உட்பட்ட) 2 குளித்தலை, நங்கவரம்
உவர் ஒன்றியங்கள் -  
மொத்தம் 20