Section: State-district-profile pages are not under access control

கடலூர் மாவட்ட விவரக் குறிப்பு

  • கடலூர் மாவட்டமானது வடமேற்கில் விழுப்புரம் மாவட்டமும் மற்றும் வடகிழக்கில் பெரம்பலூர் மாவட்டமும் மற்றும் தென்மேற்கில் அரியலூர் மாவட்டமும் மற்றும் தெற்கில் நாகப்பட்டினம் மாவட்டமும் மற்றும் வங்காள விரிகுடா கடலும் கிழக்கு எல்லையாகக் கொண்டுள்ளது.
  • இந்த மாவட்டத்தின் அட்சரேகை 110 09’ 00’’ முதல் 110 53’ 00’’ வரை வடக்கிலும் மற்றும் தீர்க்கரேகை 780 52’ 00’’ முதல் 790 51’ 00’’ வரை கிழக்கிலும் அமைந்துள்ளது. இந்த மாவட்டமானது 3706 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது.

நில அமைப்பியல் மற்றும் வடிகால்:

  • கடலூர் மாவட்டம், கடல் சார்ந்த பகுதியாக அமைந்துள்ளது. மேலும் இம்மாவட்டம் சமவெளி பகுதியாகவும் மற்றும் உயர்மேடு பகுதியாகவும் படிவுப்பாறைகளும் விருதாச்சலம் மற்றும் பண்ருட்டி வட்டங்களில் அமைந்துள்ளன. கிழக்கு சாய்வுப் பகுதியாக அமைந்துள்ளது.
  • கடலூர் மாவட்ட வடிநில பகுதியாக கெடிலம் ஆறும், பெண்ணை ஆறும் மற்றும் வெள்ளாறும் உள்ளது. கொள்ளிடம் ஆறு தெற்கு வடிநில பகுதியாக அமைந்துள்ளது.

மழையளவு:

கடலூர் மாவட்டத்தின் ஐந்தாண்டின் மழையளவு இந்திய வானியல் மையம், சென்னையின்படி கீழ்க்கண்டவாறு:

பெய்த மழையளவு மி.மீ. இயல்பான மழை மி.மீ.
2017 2018 2019 2020 2021
1379.1 965.0 1091.8 1323.4 2040.4 985

புவியமைப்பியல்:

பாறை வகை புவி அமைப்புகள்
படிவுப்பாறை 90 % கடினப்பாறை 10 %
சுண்ணாம்புகல், மணற்பாறை, கூழாங்கல், ஆற்று வண்டல், கருப்புகளி கரும்பாறை

நிலத்தடிநீர் அளவு:

இந்த மாவட்டத்தில் 42 மாதிரி கிணறுகள் (த.கு.வ. வாரியம்) தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் கண்காணிக்கப்படுகிறது. மழையளவானது பருவமழைக்கு முன்பும், பின்பும் நீர் அளவீடு செய்யப்படுகிறது. ஐந்தாண்டு மழையளவு கீழ்க்கண்டவாறு உள்ளது.:

ஜன
2017

மே
2017

ஜன
2018

மே
2018

ஜன
2019

மே
2019

ஜன
2020

மே
2020

ஜன
2021

மே
2021

5 வருட பருவ
மழைக்கு முன்

5 வருட பருவ
மழைக்கு பின்

31.1

36.1

28.2

35.0

29.7

36.6

26.6

26.4

54.8

27.9

26.7 23.7

நீடித்த நிலைத்தன்மை:

நிலத்தடிநீர் நிலைப்பு தன்மையை உருவாக்கும் பொருட்டு மாநில மற்றும் மத்திய அரசு உதவியுடன் கீழ்க்கண்டவாறு நீர்செறிவூட்டும் கட்டமைப்குளை உருவாக்கியுள்ளது.

வருவாய் உள்வட்டம் மூலம் வகைப்படுத்தல்:

நீர்பயன்பாட்டின் அடிப்படையில் இம்மாவட்டத்தை மார்ச் 2020-ம் ஆண்டில் வருவாய் உள்வட்டம் மூலம் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது.

நீர்வெளிக் கொணருதல் / பயன்பாடு அடிப்படையில் (மார்ச் 2020-ன்படி) வருவாய் உள்வட்டம் எண்ணிக்கை வருவாய் உள்வட்டங்கள்
அதிநுகர்வு நிலை ( 100 % மேல்) 6 கம்மாபுரம் (கி), கம்மாபுரம் (மே), ரெட்டிச்சாவடி,
பெண்ணாடம் நெல்லிகுப்பம், விருதாச்சலம் (தெ).
அபாயகரமான நிலை ( 90 % - 100 %) 1 தொழுதூர்
மித அபாயகரமான நிலை (70 % - 90%) 12 காடாம்புலியூர், பண்ருட்டி, , குள்ளஞ் சாவடி , குறிஞ்சிப்பாடி திருவந்திபுரம்,
ஊமங்களம் திட்டக்குடி (கி), திட்டக்குடி (மே), உடையார்குடி, சேத்தியாதோப்பு சிறுபாக்கம் விருதாச்சலம் (வ).
பாதுகாப்பான நிலை (70 % உட்பட்ட) 13 புவனகிரி, சிதம்பரம், வேப்பூர், சேத்தியாதோப்பு, காட்டுமன்னார்கோயில், கோமங்கலம் குமராட்சி,
மருங்கூர், ஒரத்தூர், பரங்கிப்பேட்டை, புதூர், திருமுட்டம், திருவக்குளம்
உவர் ஒன்றியங்கள் -  
மொத்தம் 32