Section: State-district-profile pages are not under access control

நாகப்பட்டினம் மாவட்ட சுயவிவரம்

  • நாகப்பட்டினம் மாவட்டத்தின் வடக்கு எல்லையாக கடலூர் மாவட்டம் உள்ளது. மேற்கு எல்லையாக தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டம் உள்ளது. கிழக்கு மற்றும் தெற்கு எல்லையாக வங்காள விரிகுடா அமைந்துள்ளது.
  • இந்த மாவட்டத்தின் அட்சரேகை 100 15’ 00’’ முதல் 110 30’ 00’’ வரை வடக்கிலும் மற்றும் தீர்க்கரேகை 790 30’ 00’’ முதல் 790 55’ 00’’ வரை கிழக்கிலும் அமைந்துள்ளது. இந்த மாவட்டமானது 2377 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது.

நில அமைப்பியல் மற்றும் வடிகால்:

  • நாகப்பட்டினம் மாவட்டம் சமவெளி பரப்பை உட்கொண்டது. சமவெளி பரப்பு 10 சாய்வு தளமாக உள்ளது. இந்த சாய்வு தளமானது கிழக்கு மற்றும் தென்கிழக்கை நோக்கி அமைந்துள்ளது. இது ஒரு கடற்கரை மாவட்டம் ஆகும்.
  • இதன் கடல் எல்லையானது 225 கிமீ நீளம் ஆகும். இம்மாவட்டம் காவேரி உப வடிநிலம் மற்றும் வெண்ணாறு உபவடி நிலத்தைக் கொண்டது.
  • இந்த மாவட்டத்தின் வடக்கு பகுதியில் கொள்ளிடம் மற்றும் காவேரி ஓடுகின்றன. விரசலாறு, உப்பண்ணாறு ஆகியவை மாவட்டத்தின் மத்தியப் பகுதியில் ஓடுகின்றன.
  • அரசலாறு, திருமலைராஜனாறு, வெட்டாறு, கடுவையாறு, பாண்டவையாறு, வேதாரண்யம் கால்வாய், அரிச்சந்திரா நதி ஆகியவை தென் பகுதியில் ஓடுகின்றன.
  • இந்த மாவட்டம் கொள்ளிடம் மற்றும் காவேரியின் வள நாடு பகுதியாக விளங்குகிறது.

மழையளவு:

நாகப்பட்டினம் மாவட்டத்தின் ஐந்தாண்டின் மழையளவு இந்திய வானியல் மையம், சென்னையின்படி கீழ்க்கண்டவாறு:

பெய்த மழையளவு மி.மீ. இயல்பான மழை மி.மீ.
2017 2018 2019 2020 2021
1629.0 1079.8 1456.4 1430.1 1901.2 985

புவியமைப்பியல்:

பாறை வகை புவி அமைப்புகள்
படிவுப்பாறை மணல், மணல் களி, கடற் படிவங்கள்

நிலத்தடிநீர் அளவு:

இந்த மாவட்டத்தில் 26 மாதிரி கிணறுகள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் கண்காணிக்கப்படுகிறது. மழையளவானது பருவமழைக்கு முன்பும், பின்பும் நீர் அளவீடு செய்யப்படுகிறது. ஐந்தாண்டு மழையளவு கீழ்க்கண்டவாறு உள்ளது:

ஜன
2017

மே
2017

ஜன
2018

மே
2018

ஜன
2019

மே
2019

ஜன
2020

மே
2020

ஜன
2021

மே
2021

5 வருட பருவ
மழைக்கு முன்

5 வருட பருவ
மழைக்கு பின்

6.2

8.7

4.4

16.1

3.9

6.7

3.1

11.6

2.0

11.3

9.1 3.4

நீடித்த நிலைத்தன்மை:

நிலத்தடிநீர் நிலைப்பு தன்மையை உருவாக்கும் பொருட்டு மாநில மற்றும் மத்திய அரசு உதவியுடன் கீழ்க்கண்டவாறு நீர்செறிவூட்டும் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.

வருவாய் உள்வட்டம் மூலம் வகைப்படுத்தல்:

நீர் பயன்பாட்டின் அடிப்படையில் இம்மாவட்டத்தை மார்ச் 2020-ம் ஆண்டில் வருவாய் உள்வட்டம் மூலம் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது.

நீர்வெளிக் கொணருதல் / பயன்பாடு அடிப்படையில் (மார்ச் 2020-ன்படி) வருவாய் உள்வட்டம் எண்ணிக்கை வருவாய் உள்வட்டங்கள்
அதிநுகர்வு நிலை( 100 % மேல்) 13 குத்தாலம், மாதானம் ,மயிலாடுதுறை, செம்பனார்கோயில், மங்கநல்லூர், மேலையூர்,
பீழையூர், பாழையூர், பட்டவத்தி, புத்தூர், திருவில்லையாட்டம், வைத்தீஸ்வரன்கோயில், திருவெண்காடு
அபாயகரமான நிலை ( 90 % - 100 %) 0  
மித அபாயகரமான நிலை (70 % - 90%) 0  
பாதுகாப்பான நிலை (70 % உட்பட்ட) 1 மணல்மேடு
உவர் ஒன்றியங்கள் 17 கங்கலாஞ்சேரி, கீழையூர், கீழ்வேளூர், நாகப்பட்டினம், நிர்முலை, தலைஞாயிறு,
திருமருகல், தில்லையாடி, தேவூர், தகட்டூர், வேதாரண்யம், தெற்கு பொய்காநல்லூர்,
திருக்குவளை, வள்ளிவலம், வேளாங்கன்னி, கரியபட்டினம், திருக்கண்ணபுரம்
மொத்தம் 31  
Top